மேலும் செய்திகள்
சிட்டி க்ரைம்
08-Mar-2025
தட்சிண கன்னடா: பக்கத்து வீட்டு நபரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சித்தபோது, சாலை ஓரத்தில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது.துாக்கி வீசப்பட்ட அப்பெண், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பேஜாயினில் உள்ள கிரோடியன் சாலையில் வசித்து வருபவர் முரளி பிரசாத். இவரது அடுத்த வீட்டில் வசித்தவர் சதீஷ் குமார், 69, ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவர்களின் இரு குடும்பத்தினரும் எப்போது பார்த்தாலும் சண்டை போட்டுள்ளனர்.நேற்று முன்தினம் காலையில் முரளி பிரசாத், பணிக்கு தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.இவர் வருகைக்காக தன் காரில் காத்திருந்த சதீஷ் குமார், வேகமாக முரளி பிரசாத் வாகனத்தின் மீது மோதி, வாகனத்துடன் இழுத்துச் சென்றார்.அப்போது சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீதும் கார் மோதியது. இதில், அவரும் துாக்கி வீசப்பட்டார். வீட்டின் சுற்றுச்சுவரின் இரும்பு கிரில்லில் ஒரு கால் சிக்கி தலைகீழாக தொங்கினார்.அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், காயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், உர்வா போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த போலீசாரிடம் முரளி பிரசாத், நடந்த சம்பவத்தை கூறி, தன்னை கொல்ல முயற்சிப்பதாக புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சதீஷ் குமாரை கைது செய்தனர்.அவரின் காரையும் பறிமுதல் செய்தனர். பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சுற்றுச்சுவரில் தலைகீழாக தொங்கி பெண்ணை மீட்ட அப்பகுதியினர்.
08-Mar-2025