மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
1 hour(s) ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
1 hour(s) ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
1 hour(s) ago
புதுடில்லி, எம்.டி., -- எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு ஜூன் 23ல் நடப்பதாக இருந்தது. ஆனால், இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வு, நாடு முழுதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நாளை நடக்கிறது. தேர்வு எழுத உள்ள ஐந்து மாணவர்கள், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “முதுநிலை நீட் தேர்வுக்கான மையங்கள் கடந்த 8ம் தேதி தான் ஒதுக்கப்பட்டன. அதில், காலையில் நடக்கும் தேர்வுக்கு ஒரு மையமும், பிற்பகலில் நடக்கும் தேர்வுக்கு மற்றொரு மையமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ''இதனால், இரு தேர்வுகளையும் அடுத்தடுத்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு மையங்களை முறையாக ஒதுக்கிய பின் தேர்வு நடத்த வேண்டும். அதுவரை தேர்வை ஒத்தி வைக்க உத்தரவிடக் கோருகிறேன்,'' என, வாதிட்டார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது முடியாத காரியம். ஐந்து மாணவர்களுக்காக 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது. சமீபகாலமாக, தேர்வுகளை ஒத்திவைக்கும்படி நீதிமன்றங்களை சிலர் நாடி வருகின்றனர். இது ஏற்புடையது அல்ல. விதிகளின்படி, எங்களால் தேர்வுகளை மாற்ற இயலாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago