உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 27 தொழிற்பகுதிகளை மேம்படுத்தும் திட்டம் வர்த்தக பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை

27 தொழிற்பகுதிகளை மேம்படுத்தும் திட்டம் வர்த்தக பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை

விக்ரம் நகர்:மாநிலத்தில் 29 அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பேட்டை பகுதிகளும், திட்டமிடப்படாத 27 தொழிற்பேட்டை பகுதிகளும் உள்ளன. இவற்றில் திட்டமிடப்படாத 27 தொழிற்பேட்டைகளை மேம்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.இதற்காக இந்த 27 தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் மாநில தொழில்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் பிரிஜேஷ் கோயல், டில்லி உற்பத்தியாளர் கூட்டமைப்புத் தலைவர் விஜய் விர்மானி மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் பேசியதாவது:திட்டமிடப்படாத 27 தொழில்துறை பகுதிகளை மேம்படுத்தவும் பராமரிப்பிலும் அதிக அக்கறை கொண்டுள்ளது.இந்தப் பகுதிகளை மேம்படுத்துவதற்காக வர்த்தக நிறுவனங்களுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வருகிறது. அவற்றை மறுசீரமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இதை செயல்படுத்துவதற்கான நிதியில் 90 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. தொழிற்சாலை உரிமையாளர்கள் 10 சதவீதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் பிரிஜேஷ் கோயல், “திட்டமிடப்படாத தொழில்துறை பகுதிகளில் வரைபட அனுமதிக்கான கட்டணத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும். மாநில அரசின் திட்டத்தின் கீழ் வரைபட அனுமதியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்,” என, கோரிக்கை விடுத்தார்.இந்த கோரிக்கையை அமைச்சர் பரத்வாஜ் ஏற்றுக்கொண்டார். வரைபட ஒப்புதல் கட்டணங்களை அரசாங்கத்தின் திட்டத்திற்குள் இருக்கும்படி கொள்கையை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்