உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்.எல்.ஏ., சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில், முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த 3ல் துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 26 வரை நடக்கிறது.சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி, 'அவுரங்கசீப் சிறந்த நிர்வாகி. அவரது ஆட்சியில் நம் நாடு சிறந்து விளங்கியது' என்றார்.இதற்கு ஆளும் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இந்த விவகாரம், மஹாராஷ்டிரா சட்டசபையிலும் எதிரொலித்தது. 'அபு அசிம் அஸ்மியை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து, தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்' எனக் கோரி, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால், சபை அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, தன் கருத்தை திரும்ப பெறுவதாக அபு அசிம் அஸ்மி தெரிவித்தார்.இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை நேற்று கூடியதும், அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக அபு அசிம் அஸ்மியை, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தாக்கல் செய்தார். இது, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுதும், அபு அசிம் அஸ்மி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

VSMani
மார் 06, 2025 12:05

தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வில்லையா?


Rajathi Rajan
மார் 06, 2025 11:32

உண்மையை சொன்னால் சங்கிளுக்கு பொறுக்காது


பெரிய ராசு
மார் 06, 2025 10:52

உலகத்திலே அவரை நல்லவர்னு சொல்லறவர் ஒருத்தர் தாண், கேடு கெட்டவன் அந்த கொடூரன்


naranam
மார் 06, 2025 10:18

அதான் இவன் மூஞ்சியப் பார்த்தாலே அவுரங்கசீப் தெரியுதே!


veeramani
மார் 06, 2025 09:28

மொகலாய அரசில் கொடூரமானவர் அவுரங்கசீப் . பல இந்து கோயில்களை விடுத்து அதில் மசூதிகளை காட்டியவர் என ரெகார்ட் கள் சொல்லுகின்றன. அவரை புகழ்வகதிற்கு ஒன்று இல்லை .


user name
மார் 06, 2025 09:10

அவ்ரங்க சீப் வரலாறை வரலாராக பார்த்தல் அவர் நல்லவர். எந்த ஹிண்டுவையும் கொடுமை செய்ததில்லை . சங்கி கண்ணாடி அணிந்து பார்த்தால் அவர் கெட்டவர்


Anonymous
மார் 06, 2025 10:35

கொடுமையெல்லாம் இல்லீங்க, நேரே சொர்க்கம் தான்,


Anand
மார் 06, 2025 10:50

நீ அந்த மூர்க்க கண்ணாடியை கழட்டிட்டு பார்... உனக்கு நீயே ...


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 06, 2025 11:14

அவுரங்க சிப்பின் மறு ஜென்மம் பெயர் User Name போல் ஹஹஹஹ


Mecca Shivan
மார் 06, 2025 08:38

தண்டனை தொடரட்டும் ..இன்னும் கடுமையாக கொடுமையாக இருந்தால்தான் இவர்கள் அடங்குவார்கள் ..


RAMAKRISHNAN NATESAN
மார் 06, 2025 08:29

தன்னை காஷ்மீரி பண்டிட் என்று அழைத்துக்கொண்ட ...


RAJ
மார் 06, 2025 08:27

தேச துரோகி... கல்லால் அடித்து கொல்லவேண்டும்.


ராமகிருஷ்ணன்
மார் 06, 2025 07:26

இருக்கட்டும், ஒளரங்கசீப் எந்த நாட்டில் இருந்து வந்தானோ அங்கயே போ, இங்கே இருந்து ஏன் கூவுரே.