உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி

5 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி

சிக்கபல்லாபூர் : ஐந்து பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய், தானும் விஷம் குடித்தார்.சிக்கபல்லாபூரின், பாகேபள்ளியில் வசிப்பவர் கோபால், 38. இவரது மனைவி அனிதா, 30. தம்பதிக்கு லாவண்யா, 11, தரணி, 9, காவ்யா, 8, ரக்ஷிதா, 5, ஸ்ரீவள்ளி, 2, ஆகிய ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அனிதா மீண்டும் கருவுற்றார்.ஐந்தும் பெண் குழந்தைகளாக பிறந்ததால், கோபால் கோபமடைந்தார். மனைவி, குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுத்தார். அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் மனம் நொந்த அனிதா, நேற்று காலை குழந்தைகளுக்கு விஷம் குடிக்க வைத்தார். பின் தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.மயங்கிக் கிடந்த இவர்களை முதலில், பாகேபள்ளி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக சிக்கபல்லாபூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தாயும், குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ