உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணம் இன்று நடக்கிறது.பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியிரின் 3வது மகன் ஆனந்த், இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்தது. திருமணம் வரும் மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இன்று (ஜூலை 12-ம் தேதி ) துவங்கி வரும் 14ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள் , தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

S R George Fernandaz
ஜூலை 12, 2024 11:25

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம். இந்தியா மக்களுக்கு இன்றய முக்கிய செய்தி. ரொம்ப முக்கியம்....


Govindh Sharma
ஜூலை 12, 2024 08:40

ஒரு விஷயம் என்னவென்றால் இந்த தேதி மிக மிக ஆபத்தானதாகவும் தவறானதாகவும் இருக்கிறது தம்பதிகளுக்கும் பிரிவினை ஏற்படுத்தும் தேதி இது அல்லது பொருளாதார பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் இது சம்பந்தமாக நான் ஈமெயில் கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை எந்த ரெஸ்பான்ஸ் இல்லை ஒருவேளை பணத்துக்காக அனுப்பி இருக்கிறார்கள் என்று நினைத்து விட்டார்களோ கடைசி முயற்சியாக துக்ளக் குருமூர்த்தி சாருக்கும் இந்த விவரத்தை கூறி ஈமெயில் அனுப்பினேன் அவர் பார்த்தாரா என்று தெரியவில்லை தயவுசெய்து நான் சொல்வது போல நடக்கிறதா என பாருங்கள்இந்த விஷயத்தில் கண்டிப்பாக அம்பானிகள் ஏமாந்து விட்டார்கள் கடவுள் கருணை புரிவாராக


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:10

3 திருமணங்கள் செய்து கொண்ட கட்டுமரம் ஜாதகம் பார்த்து திருமணம் செய்து கொள்ளவில்லை. ஜாம் ஜாம்னு இருக்கிறார்கள்.


Mani . V
ஜூலை 12, 2024 05:48

கைலாசாவின் அதிபர் நித்தியானந்தா என்று சொல்வது போல் இந்தியாவின் முதலாளி அம்பானியின் மகன் என்று எழுதலாம். மக்களின் வரிப்பணத்தில் கடன் கொடுத்து அதை தள்ளுபடி செய்யும் ஜீ க்கு ஒரு ஜே.


Govindh Sharma
ஜூலை 12, 2024 08:37

அது எப்படி ஐயா மக்களின் வரிப்பணத்தில் இருந்து கடன் கொடுக்க முடியும் அம்பானி சம்பாதித்து சேர்த்த பணம் இல்லையா அது மத்திய அரசு இவர்களுக்கு சுமார் பத்து லட்சம் கோடி சும்மா தூக்கி கொடுத்து விட்டதாஆடிட்டர் தூங்குகிறாரா எந்த அளவு தமிழ்நாட்டு மக்களை மூளை மழுங்க வைத்து உள்ளீர்கள் எப்பொழுது திருந்துவீர்கள்மிகப்பெரிய அறிவு ஜீவி என்று உங்களை தாங்களே எண்ணிக்கொண்டீர்கள் போலும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 11:18

திருபாய் அம்பானி தொழிலில் ஆரம்ப கட்டத்தில் இருந்த போது வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் தருவிக்கப்பட்ட இயந்திரங்களை எந்த சோதனையும் செய்யாமல் துறைமுகத்திலிருந்து விடுவிக்க பட்டதாக அப்போது பேசு பொருளாக இருந்தது. அப்பொழுது பிரதமராக இருந்தவர் திருமதி.இந்திரா காந்தி. இந்திரா காந்தி இறப்பு பின்னர் பிரதமராக ராஜிவ் காந்தி இருந்த பொழுது திருபாய் அம்பானி அவர்கள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களிடம் பேச அனுமதி கேட்ட பொழுது அவருக்கு ஜந்து நிமிடம் ஒதுக்கி பட்டதாகவும் அதுவும் பிரதமர் ராஜீவ் காந்தி வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போது தரப்பட்ட தாகவும் அந்த ஐந்து நிமிடமே தனக்கு போதும் என்று திருபாய் அம்பானி கூறி சந்திக்கும் போது பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களிடம் உங்கள் அம்மா இருந்த போது நான் தேர்தல் நிதி கொடுக்க ஒப்புக்கொண்டேன். அதை எப்போது எப்படி தருவது என்று கூறினால் போதும் என்று கூறியவுடன் அந்த சந்திப்பு அதற்கு பின்னர் பல மணிநேரம் நீடித்ததாக அந்த காலத்தில் பேசிக் கொள்கிறார்கள் பாமர மக்கள்.


ராஜா
ஜூலை 12, 2024 05:28

மும்பையில் பெருமழை வெள்ளம். இதற்கிடையில் ஆடம்பர திருமணம்.. சரியா படவில்லை.மக்கள் புலம்புகிறார்கள். ஒரே அபார்ட்மெண்டில் எதிர் எதிர் வீட்டில் சுப காரியமும் அசுப காரியமும் நடப்பது


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:18

கண்டிப்பாக திராவிட நாட்டின் மன்னர் பரம்பரையில் நிச்சயம் ஓரிருவராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ