உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான்சி பெலோசி - தலாய்லாமா சந்திப்பு : சீனா கடும் எதிர்ப்பு

நான்சி பெலோசி - தலாய்லாமா சந்திப்பு : சீனா கடும் எதிர்ப்பு

தர்மசாலா: அமெரிக்கா பார்லிமென்ட் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் திபெத் வருகைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி, பெலோசி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் இந்தியாவின் தர்மசாலாவிற்கு வருகை தர உள்ளனர்.அங்கு திபெத் மதகுரு தலாய்லாமாவை சந்தித்து பேசுகின்றனர். இதற்கு சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வயது முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக தலாய்லாமா அமெரிக்க செல்லஉள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நான்சி பெலோசி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினரின் நேற்று இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசம் வந்திறங்கனர். அக்குழுவினர் தலாய்லாமாவை சந்தித்து பேசுகின்றனர். முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த பாதுகாப்புபடையினர் ஆதரவுடன் தைவான் சென்று அந்நாட்டு தலைவர்களை நான்சி பெலோசி, சந்தித்தார். இன்று தலாய்லாமாவை நான்சி பெலோசி சந்திக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nathan
ஜூன் 19, 2024 11:50

திபெத் சீனாவின் ஒரு பகுதி அல்ல சீனாவின் ஆக்கிரமிப்பு பிரதேசம் மட்டுமே எனவே திபெத்திய புத்த மதத் தலைவர்கள் சுதந்திரமாக யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம் சீனா திபெத்தை விட்டு விட்டு வெளியேறி திபெத்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும்


Kasimani Baskaran
ஜூன் 19, 2024 06:11

சீனாவுக்கு சினமூட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர் நான்சி பொலோசி . அவரது பணி சிறக்க வாழ்த்துகள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை