| ADDED : ஜூலை 11, 2024 01:15 AM
பொய் பரப்புகின்றனர்!ரயில் டிரைவர்களுக்கு அவசர காலங்களில் மட்டுமே பணி நேரம் அதிகமாக இருக்கும். அதன்பின் போதுமான ஓய்வு கொடுக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் இருந்தது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. அஸ்வினி வைஷ்ணவ்ரயில்வே அமைச்சர், பா.ஜ.,வேறு எங்கும் இல்லை!ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் பேசும்போது தலைவர் ஜக்தீப் தன்கர் அடிக்கடி இடையூறு செய்கிறார். வேறு எந்த நாட்டிலும் சபைத் தலைவர் இதுபோல் குறுக்கிடுவதில்லை. பார்லி.,யில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். அதற்கு பதிலளிக்கும் போது மைக்குகள் தானாகவே நின்றுவிடுகின்றன. கபில் சிபல்சுயேச்சை எம்.பி., - ராஜ்யசபா எப்போது விசாரிக்கும்?மதுபான முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி மீது ஆதாரமின்றி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் அப்ரூவர்களாக மாறியவர்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பா.ஜ.,வுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கியுள்ளனர். இது குறித்து மத்திய அரசு எப்போது விசாரணை நடத்தும்? சவுரவ் பரத்வாஜ்டில்லி அமைச்சர், ஆம் ஆத்மி