தேசியம் -பேட்டி
தவறுதலாக அமைந்த அரசு!தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தவறுதலாக அமைந்துவிட்டது. இது ஒரு மைனாரிட்டி அரசு. எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்லோக்சபா வெற்றி துவக்கமே!மஹாராஷ்டிராவில் மஹா விகாஸ் அகாதியின் வெற்றி முடிவல்ல துவக்கம். எங்களின் கூட்டணி, வருகிற சட்டசபை தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிக்கும். அணி மாறிய எம்.எல்.ஏ.,க் கள் திரும்ப வந்தாலும் சேர்க்க மாட்டோம்.உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா உத்தவ் அணிஇந்தியாவின் தாய் இந்திரா!முன்னாள் பிரதமர் இந்திராவை, இந்தியாவின் தாயாகக் கருதுகிறேன். காங்., முன்னாள் முதல்வர் கருணாகரன், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் நாயனார் ஆகியோர், என் அரசியல் குருக்கள். அதற்காக மற்றவர்களை அவமதிக்கவில்லை. சுரேஷ் கோபிமத்திய இணை அமைச்சர், பா.ஜ.,