உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செபி தலைவர் மீது புதிய புகார்

செபி தலைவர் மீது புதிய புகார்

மும்பை: 'செபி'அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், விதிகளை மீறி ஏழு ஆண்டுகள் தன் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வாயிலாக, 3.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக, புதிய குற்றச்-சாட்டு எழுந்துள்ளது.'அதானி' குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' அமைப்பின் தலை-வர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முத-லீடு செய்திருப்பதாக, ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மை-யில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால், இவையனைத்-தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுத்திருந்தார். இந்நிலையில், தற்போது 'ராய்ட்டர்' செய்தி நிறுவனம் வெளியிட்-டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017ம் ஆண்டு 'செபி'அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்த மாதவி புரி புச், கடந்த 2022ல் செபி அமைப்பின் தலைவராக பொறுப்-பேற்றார். 2017 முதல் 2022ம் ஆண்டு வரையிலான ஏழு ஆண்-டுகளில், 'அகோரா அட்வைசரி பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்-தின் 99 சதவீத பங்குகளை வைத்திருந்த அவர், 3.71 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளார். பதிவாளரிடம் தாக்கல் செய்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்-ளது.'செபி' விதிகளின்படி, அலுவலக முழு நேர உறுப்பினர்கள், வேறு தொழில்முறை நடவடிக்கையில் இருந்து சம்பளமோ, ஆதாயமோ பெற தடை உள்ளது. ஆனால், மாதவியின் நடவ-டிக்கை, இந்த விதிகளுக்கு மாறாக இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Swaminathan L
ஆக 17, 2024 13:43

மாதுரி புச்சின் கணவர் அந்த நிறுவனத்தின் மூலம் பிஸினஸ் செய்தார் என்று மாதுரி புச் பேட்டியும், தகவலும் அளித்தார். பங்குகள் யார் பெயரில் இருந்தாலும், வேலை செய்து வருமானம் ஈட்டியது இன்னொருவராக இருக்கலாம். தவறில்லை.


N Sasikumar Yadhav
ஆக 17, 2024 08:31

பாரதநாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க பலநாடுகள் முயற்சி செய்கிறது . கண்டக்கண்ட கலிஜெல்லாம் பாரதநாட்டு வளர்ச்சியை கண்டு அஞ்சுகிறது .பாரதம் தன்னிறைவு பெறுவதால் பொறாமைப்படுகிறது பாரதநாட்டில் வசிக்கும் தேசதுரோக கும்பல்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி