உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக சட்டசபையில் புதிய மைசூரு வாயில்

கர்நாடக சட்டசபையில் புதிய மைசூரு வாயில்

பெங்களூரு: கர்நாடக சட்டசபை நுழைவு வாயிலில், 'மைசூரு வாயில்' என்ற கலை நயத்துடன் கூடிய புதிய வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் சித்தராமையா நாளை திறந்து வைக்கிறார். இந்தியாவில் உள்ள தலைமை செயலகங்களில், கர்நாடக தலைமை செயலகமான விதான் சவுதாவுக்கு தனி மவுசு உண்டு. அதன் கட்டட கலை, கம்பீர தோற்றம் பார்ப்போரின் மனதை கொள்ளை கொள்ளும். பெங்களூரின் அடையாளமாகவும் திகழ்கிறது.பல்வேறு வெளி நாடுகளின் முக்கிய பிரமுகர்களும், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரமுகர்களும் விதான் சவுதாவின் கலை நயத்தை பார்த்து வியந்தது உண்டு.தற்போது அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில், 'மைசூரு வாயில்' என்று சட்டசபை வளாகத்துக்கு செல்லும் பகுதியில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.கதவுகளை ரோஸ் வுட் எனும் கருங்காலி மரத்தில், 15 அடி உயரம், 16 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அதுவும் மைசூரு அரண்மனையின் தர்பார் அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருக்கும் கதவுகளை போன்று மிகவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.கதவுகளின் கைப்பிடிகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று கதவுகள் உள்ளன. நுழைவு வாயிலின் மேல் பகுதியில், கர்நாடக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது.சட்டசபை சபாநாயகர் காதர் அறிவுறுத்தலின்படி, மைசூரை சேர்ந்த கிஜர் அலி கான் என்ற கலைஞர் வடிவமைத்துள்ளார். இதை, முதல்வர் சித்தராமையா இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன், திறந்து வைக்கிறார்.இதற்கு முன், இப்பகுதியில் சாதாரண இரும்பு கேட் இருந்தது குறிப்பிடத்தக்கது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ