உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை: பிரகாஷ் ஜாவடேகர்

ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை: பிரகாஷ் ஜாவடேகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை,' என்று முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்கேரள மாநில தேர்தல் பொறுப்புக்குழு தலைவரான பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: மத்தியில் மோடி அரசு மீண்டும் வரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூட உறுதியாக நம்புகின்றனர். பா.ஜ., கூட்டணிக்கு 370 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக கிடைக்கும்.தேர்தலுக்குப் பின்னர் கேரளாவில் நிரந்தரமாக பல மாற்றங்கள் ஏற்படும். எந்தவித பாகுபாடும் பார்க்காமல் அனைத்து நலத்திட்டங்களின் பலன்களையும் கேரள மக்களுக்கு மோடி அளித்துள்ளார்.1.5 கோடி பேருக்கு இலவச அரிசி, 50 லட்சம்இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முத்ரா கடன், 35 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் சம்மான் திட்டம், 4 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு, 20 லட்சம் குடும்பங்களுக்கு ஜல்ஜீவன் குடிநீர் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மோடி அரசு தான் மீண்டும் வரும் என்று எல்லா வாக்காளர்களுக்கும் தெரியும். ராகுல் பிரதமர் ஆவார் என்று இப்போது யாரும் கூறுவதில்லை. கேரளாவில்5 முதல் 10 தொகுதிகள்வரை கண்டிப்பாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

வீரத் தமிழன்
மார் 22, 2024 12:10

ஸ்டாலின் நிச்சயமாக ராகுல் காந்தியை தான் பிரதமராக கைகாட்டுவார் ஏனென்றால் திமுக யாரை கை காட்டுவார்களோ அவர்கள் தான் இந்தியாவில் பிரதமராக இருக்க முடியும்


பேசும் தமிழன்
மார் 22, 2024 10:14

ஏன் சொல்கிறார்களே.... ராகுல் பிரதமார் ஆவார்..... இந்தியாவில் அல்ல இத்தாலியில் !!!


பேசும் தமிழன்
மார் 22, 2024 09:01

அவரை பிரதமார் என்று கூற.... அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கிறது... அந்த பப்பு வாய்க்கு வந்ததை உலறி கொட்டி கிடைக்கும் ஓட்டையும்.... கிடைக்காமல் செய்து விடுவார்...... யாராவது தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வார்களா ???


Oviya Vijay
மார் 22, 2024 08:23

மோடி பிரதமர் ஆகக் கூடாது என்பதே பிஜேபி அல்லாத மற்ற கட்சியினருக்கு முக்கியம்...


முருகன்
மார் 22, 2024 08:05

மக்களே ஒருநாள் ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்வார்கள்


Kasimani Baskaran
மார் 22, 2024 05:37

யார் பிரதமர் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார் - தீம்கா ஐடி விங்காரங்க சொன்னாங்க


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை