உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூடுதலாக 40 ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு ஸ்டால்

கூடுதலாக 40 ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு ஸ்டால்

பெங்களூரு, : தென்மேற்கு ரயில்வே பிரிவுக்கு உட்பட்ட ரயில்களில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ் இயங்கும் கடைகளின் எண்ணிக்கையை 40லிருந்து 80 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.ரயில்வே சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாடு முழுதும் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டம் துவங்கப்பட்டது. கர்நாடகாவில் தென்மேற்கு ரயில்வே பெங்களூரு பிரிவில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், கன்டோன்மென்ட், கே.ஆர்.,புரம், பானஸ்வாடி உட்பட 40 ரயில் நிலையங்களில் 40 ஸ்டால்கள் திறக்கப்பட்டன.சென்னபட்டணாவின் மரப்பொம்மை; மாண்டியாவின் வெல்லம்; திப்டூரின் தேங்காய்; முதிரெட்டிபள்ளியின் சேலைகள்; கூர்க் கலாசாரத்தை விளக்கும் பொருட்கள், தானியங்கள், தோல் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்கள், சோப்பு, உலர்பழங்கள், இயற்கை தேன், கைவினை பொருட்கள் போன்றவை, 40 ரயில் நிலையத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.இது தொடர்பாக, தென்மேற்கு ரயில்வே பெங்களூரு பிரிவு மக்கள் தொடர்பு அலுவலர் திரிநேத்ரா கூறியதாவது:'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டத்திற்கு, பயணியரிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, கோலார், சிந்தாமணி உட்பட பல்வேறு ரயில் நிலையில்களில், மேலும் 40 ரயில் நிலையங்களில், உள்ளூர் தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க, தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.ரயில் நிலையங்களில் இடவசதி மற்றும் தயாரிப்புகளுக்கு ஏற்ப கடைகள், தள்ளுவண்டிகள் வழங்கப்படும். இதை பயணியர் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்