உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளக்கட்டுப்பாட்டு அறை திறக்க உத்தரவு

வெள்ளக்கட்டுப்பாட்டு அறை திறக்க உத்தரவு

விக்ரம் நகர்:யமுனை நீர் வெளியேற்றப்படும் ஹத்னி குண்ட் தடுப்பணையை 24 மணி நேரமும் கண்காணிக்க வெள்ளக் கட்டுப்பாட்டு அறையை டில்லி அரசு அமைத்துள்ளது.தேசிய தலைநகர் பிரதேசத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல், பரிந்துரை செய்தல், ஒருங்கிணைத்தல் தொடர்பான உயர்மட்டக் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்குப் பின் அமைச்சர்கள் ஆதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு, யமுனை 70 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியது. வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை சமாளிக்க மாநில அரசு தயாராகி வருகிறது. ஹதினி குண்ட் தடுப்பணைக்கு வரும் யமுனை ஆற்றின் தண்ணீரை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீட்பு இயந்திரங்கள், நிவாரணப்பொருட்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளன. கட்டுப்பாட்டு அறை தரவுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். கட்டுப்பட்டு அறை முற்றிலும் கணினிமயமாக்கப்படும்.வெள்ளக் கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி, டில்லி மேம்பாட்டு ஆணையம், முனிசிபல் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை