உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டட பணிக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்த உத்தரவு

கட்டட பணிக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்த உத்தரவு

பெங்களூரு: ''கட்டட கட்டுமான பணிகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தடையில்லா சான்றிதழ் கிடைக்காது,'' என மாசு கட்டுப்பாடு ஆணையம் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக மாநில மாசுக்கட்டுப்பாடு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரில் நிலத்தடி நீர் தவறாக பயன்படுத்துவது அதிகரிக்கிறது. வீடு, கட்டடம் உட்பட அனைத்து கட்டட கட்டுமான பணிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது குறித்து வீட்டு உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பெங்களூரில் குறைந்தபட்சம் 15 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரித்த நீரை, கட்டட கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தடையில்லா சான்றிதழ் கிடைக்காது.பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதை கட்டுப்படுத்தவும், நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கிலும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதால், கட்டடத்தின் திறன் குறையுமோ என, கட்டட கட்டுமான நிறுவன தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர். இந்த நீர் பாதுகாப்பானது. கட்டட திறன் குறையாது என, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் விஞ்ஞானிகள் உறுதி அளித்துள்ளனர்.சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை, கியூரிங், சிமென்ட் கலவைக்கு பயன்படுத்தலாம். ஆனால் கட்டட தொழிலாளர்கள் கை கால்களை கழுவ, குளிப்பது போன்ற தனிப்பட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்த கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை