உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்., - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணிகள்

பெங்., - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மந்த கதியில் நடக்கும் விரிவாக்க பணிகள்

சாம்ராஜ் நகர்: பெங்களூரு -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணிகள் மந்தகதியில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.பெங்களூரில் இருந்து சாம்ராஜ் நகர், கொள்ளேகால் வழியாக தமிழகத்தின் திண்டுக்கல்லுக்கு தேசிய நெடுஞ்சாலை 209 செல்கிறது. இந்நிலையில் சாம்ராஜ்நகர் டவுனில் இருந்து ஹனுார் வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின.சாலை விரிவாக்கத்தின் போது கொள்ளேகால், அகரா, மாம்பள்ளி, எலந்துார் ஆகிய பகுதிகளில் 12 சிறிய பாலங்கள், ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்று கூறப்பட்டது.சாலை விரிவாக்க பணிகள் துவங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் மந்த கதியில் நடந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், சிரமத்தை அனுபவிக்கின்றனர்.சாலை விரிவாக்கம் செய்யும் இடங்களில், வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தற்போது பெய்யும் மழையால் கொள்ளேகால் அருகே ஹம்பாபுரா கிராமத்தின், சாலை விரிவாக்கம் செய்யப்படும் இடம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.இது ஒரு பக்கம் இருக்க, சாலை விரிவாக்க பணிகளுக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாக பணம் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை