வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருச்சிராப்பள்ளி கோவை , மதுரை, ஈரோடு, கரூர், விழுப்புரம், காட்பாடி, ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவகங்கள் தேவை
பெங்களூரு: முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியருக்காக, கர்நாடகாவில் ஏழு ரயில் நிலையங்களில் 'மக்கள் உணவகத்தை', ரயில்வே திறந்து உள்ளது.தற்போது ரயில்களில் உள்ள உணவகங்களில் உணவு விலை அதிகமாக உள்ளது.வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குடிநீர் பாட்டில் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும்; காலை உணவு 40 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும்; மதிய உணவு 80 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.முன்பதிவு செய்யப்பட்ட பயணியர், இதை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியர் வாங்குவதில்லை. வீட்டில் இருந்தே குடிநீர் பாட்டிலில் தண்ணீர், உணவு கொண்டு வந்து, பசியாறிக் கொள்கின்றனர். சுற்றுலா ஆணையம்
இந்நிலையில், ரயில்வே மற்றும் ரயில்வே உணவு, சுற்றுலா ஆணையம் இணைந்து, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணியருக்காக, கர்நாடகாவில் ஏழு ரயில் நிலையங்கள் உட்பட நாட்டில் 100 ரயில் நிலையங்களில், 150 பிளாட்பாரம்களில், சிறிய ஸ்டிரெச்சரில் 'மக்கள் உணவகம்' திறந்துள்ளது.தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், மைசூரு, விஜயபுரா, பல்லாரி மற்றும் தெற்கு ரயில்வே பிரிவுக்கு உட்பட்ட மங்களூரு சென்ட்ரல், மங்களூரு சந்திப்பில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.காலை உணவு 20 ரூபாய்க்கு, 175 கிராம் உள்ள ஏழு பூரி, 150 கிராம் உள்ள ஒரு பஜ்ஜி; மினி உணவு 50 ரூபாய்க்கு 350 கிராம் எடையில் தயிர் சாதம் / எலுமிச்சை சாதம் / புளி சாதம், பொங்கல் / 350 கிராமில் மசாலா தோசை; 200 மி.லி., குடிநீர் பாட்டில் மூன்று ரூபாய்க்கு கிடைக்கும்.2_DMR_0016, 2_DMR_0017ரயில்வே சார்பில் திறக்கப்பட்ட 'மக்கள் உணவகத்தில்' வாங்கிய பயணி. (அடுத்த படம்) உணவுகளின் விலை பட்டியல். இடம்: மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையம், தட்சிண கன்னடா.
திருச்சிராப்பள்ளி கோவை , மதுரை, ஈரோடு, கரூர், விழுப்புரம், காட்பாடி, ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவகங்கள் தேவை