உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஎச்.டி., மாணவர் பல்கலையில் மர்ம சாவு 

பிஎச்.டி., மாணவர் பல்கலையில் மர்ம சாவு 

ஞானபாரதி: பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த, மாணவர் மர்மமான முறையில் இறந்தார்.சிக்கபல்லாப்பூரை சேர்ந்தவர் ரங்கநாத் நாயக், 27. பெங்களூரு ஞானபாரதியில் உள்ள, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு விபத்தில் சிக்கினார். அதன்பின்னர் அடிக்கடி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று காலை பல்கலைக்கழகத்தில் உள்ள உணவகத்துக்கு சென்று, ரங்கநாத் நாயக் உணவு சாப்பிட்டார்.பின்னர் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அறை கதவை தட்டியும் திறக்கவில்லை.ஞானபாரதி போலீசார் அங்கு வந்து, கதவை உடைத்து சென்று பார்த்தனர். மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை