உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு நிலங்களில் வழிபாட்டு தலங்கள்: அகற்றுவதற்கு கேரளா கோர்ட் உத்தரவு

அரசு நிலங்களில் வழிபாட்டு தலங்கள்: அகற்றுவதற்கு கேரளா கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: 'அரசு நிலங்களில், அனுமதியில்லாத, சட்டவிரோதமான வழிபாட்டு தலங்கள் இருக்கக் கூடாது. அவற்றை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா தோட்டத் தொழில் வாரியம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி

பத்தனம்திட்டா பகுதியில் அரசு குத்தகைக்கு கொடுத்துள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:தோட்ட தொழில் வளர்சிக்காக நிலங்களை அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கென குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு எந்தவிதமான அனுமதியும் இல்லாமல், பல மதங்களின் வழிபாட்டு தலங்களும் இந்த நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்களுக்கு இடையே பல முறை மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. அனுமதியில்லாத வழிபாட்டு தலங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கடவுள் எங்கும் நிறைந்துள்ளார்; அனைத்திலும் நிறைந்துள்ளார். அதனால் இதை வைத்து, அரசு நிலங்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டு தலங்களை அமைக்கக் கூடாது. அவற்றை, ஏழை எளிய மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் அல்லது அவர்களுக்கு பிரித்து தர வேண்டும். அவ்வாறு செய்தால், அனைத்து கடவுள்களும் மகிழ்ச்சி அடைவர். கேரளா ஒரு சிறிய மாநிலம்.இங்கு நுாற்றுக்கணக்கான கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்ளன. கடவுளின் நாடு என்றழைக்கப்படும் இங்கு, மக்கள் தொகையும் அதிகமாக உள்ளது. அதனால், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது.

அறிக்கை தாக்கல்

இந்த நிலம் மட்டுமல்லாமல், மாநிலம் முழுதும் உள்ள அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து, கலெக்டர்கள் வாயிலாக, ஆறு மாதங்களுக்குள், தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில் உள்ள சட்டவிரோத வழிபாட்டு தலங்களை, அதற்கடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுதும் அகற்ற வேண்டும். ஓராண்டுக்குப் பின், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
மே 31, 2024 12:01

தமிழகத்தில் கோவில் நிலங்களில் தனியார் ஆக்கிரமிப்புக்கள். அவற்றையும் அகற்றவேண்டும்.


duruvasar
மே 31, 2024 09:44

திருச்சூர் ஐ தாண்டி கொல்லம் வரை சாலை வழியில் சென்றால் சராசரியாக ஒவ்வொரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் சாலையில் இருமங்கிலும் கிருத்துவ தேவாலயங்களை பார்க்கலாம். இது கோட்டயம், திருவல்லா, பத்தனம்திட்டா பகுதியில் மிக அதிகமாக தென்படும்.


ஆரூர் ரங்
மே 31, 2024 09:27

பொது இடங்களில் கட்சிக் கொடிகளை நடலாம். தலைவர்களின் சிலைகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யலாம். நடுச்சாலையில் தொழுகை நடத்தலாம். ஆனால் குடியிருக்கும் பகுதியில் மக்கள் மன நிம்மதிக்காக சிறு ஆலயங்களை கட்டக்கூடாதா? வெள்ளையர்கள் நம்மிடமிருந்து பிடுங்கிய நிலப்பகுதிகளில் தங்களது வழிபாட்டு தலங்களைக் கட்டியுள்ளார்களே. அவற்றை என்ன செய்யலாம்?


Ravi.S
மே 31, 2024 10:25

உங்கள் கருத்து மிக சரியானது


S. Gopalakrishnan
மே 31, 2024 08:42

ஆயிரக்கணக்கான வருஷங்களாக மஹாராஜாக்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் வருவாய்த்துறை பதிவேட்டில் எவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது? ஒரு வேளை திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில் கூட அரசாங்க இடம் என்று குறிப்பிடப் பட்டிருக்கும் !


M S RAGHUNATHAN
மே 31, 2024 07:55

எல்லா வழிபாட்டு தலங்களுமா அல்லது ஹிந்து தலங்கள் மட்டுமா? கம்யூனிஸ்ட் கட்சிகள் அலுவலகங்கள் அனைத்தும் தனியார் நிலத்தில் தான் இருக்கிறது. ஒரு அலுவலகம் கூட அரசு நிலத்தை ஆக்ரமித்து கட்டப் படவில்லை என்று ஒரு பிரமாண பத்திரம் கேரள அரசு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யுமா?


GMM
மே 31, 2024 07:44

அரசு நிலம். மத்திய, மாநில, மாவட்ட மற்றம் கூட்டுறவு சங்க தேவைக்கு அதிக நிலம் தேவை. மாநில அதிகாரிகள் தேவை கேட்டு, உடனடியாக பிரித்து கொடுப்பது இல்லை. ஊழல் செய்ய வழி வேண்டும்.அரசு எடுத்தால், அரசு துறைக்கு மட்டும் பயன்பட வேண்டும். பல அரசு அலுவலகம் வாடகை இடத்தில் செயல்படும். ஏழை எளிய மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமாம். ஏழை மறு விற்பனை செய்ய முடியும். ஏழை அளவுகோல். ஏழை ஒருநாள் பணக்காரர் ஆவார். அப்போது பலர் ஏழையாக இருப்பர். அவர்கள் தேவைக்கு நிலம்? இது அரசியல் கட்சி தீர்ப்பு போல் உள்ளது.


tmranganathan
மே 31, 2024 07:35

What about illegal resorts built by politicians on government lands and not demolished despite court orders?


Krish
மே 31, 2024 07:11

வழிபாட்டு தலங்களின் இடத்தில் அரசு ஆக்ரமிப்புகள் ?????


Pandi Muni
மே 31, 2024 08:21

அது வேணும்னா கோயில்கள சுரண்டி தின்னுக்கலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை