உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: அசையா சொத்து, வாகனம் இல்லை: வேட்பு மனுவில் தகவல்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: அசையா சொத்து, வாகனம் இல்லை: வேட்பு மனுவில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. ஆனால் அசையா சொத்து மற்றும் வாகனம் இல்லை என தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல் வெளியாகி உள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. ஜூன் 1ம் தேதி, 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (மே 14) கடைசி நாள் என்பதால், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வாரணாசி வந்தார். முன்னதாக அவர் கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.பின்னர், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உறுதிமொழி படிவத்தை படித்து உறுதியளித்துவிட்டு, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார். வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. அசையா சொத்து மற்றும் வாகனம் இல்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். முந்தைய லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.51 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடையநல்லூர் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த பிரதமர் மோடி

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று தொகுதி தேர்தல் அலுவலரான ராஜலிங்கத்திடம் தனது மனுவை தாக்கல் செய்தார். ஐஏஎஸ் அதிகாரியான ராஜலிங்கம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Anantharaman Srinivasan
மே 15, 2024 00:24

மேலே போட்டுகிற டிரஸ் எல்லாம் கணக்கில் வராது


Gopi
மே 14, 2024 23:48

நா நம்பிட்டேன்


ManiK
மே 14, 2024 20:48

ஒரு கர்மயோகி இப்படி அல்லது இதைவிட எளிமையாகத்தான் வாழ்வார்...இதெல்லாம் திராவிட கும்பல்களுக்கு புரியாது...


sankaranarayanan
மே 14, 2024 20:40

ஒரு நாட்டின் பிரதமர் தனது அசையும் அசையா சொத்துக்களின் மதிப்புகளை விவரமாக கூறினால் உங்களுக்கு சந்தேகம் வருகிறது எவ்வளவோ அரசியல்வாதிகள் இவைகளை முற்றிலும் மறைத்து மதிப்பை குறைத்து வெளியிடும்போது எவருமே வாயை திறப்பதில்லை இதுதானய்யா மனிதப்பிறவியின் புத்தி கோளாறு


உமேஷ்குமார்
மே 14, 2024 20:37

எனக்கு சொந்தமா ஒரு சைக்கிள்.கூட இல்லை ஹைன். 3.6 கோடியை வெச்சுக்கிட்டு சைக்கிள் கூட வாங்க முடியாத ஏழைப்பங்காளன் ஹைன்.


பாமரன்
மே 14, 2024 20:31

நம்ம ஜி சொத்து மதிப்பு உயர்ந்தது விலைவாசி உயர்வாலா இல்லைன்னா பகோடாஸ் பாஷையில் சொன்னால் இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதாரமா உயர்ந்ததாலா? ஏன் வம்பு ரெண்டாவது ஆப்ஷனை க்ளிக் பண்ணிடுவோம் ? இல்லைன்னா வைவாங்க? அப்புறம் குடும்ப உறுப்பினர்கள் சொத்து விவரம் கொடுக்கலையா காசு அதிகம் இருந்தா யசோதா பென்னுக்கு குடுக்கலாம்ல என்ன நான் சொல்றது ?


Narayanan Muthu
மே 14, 2024 19:56

நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான் ஆட்சி மாற்றத்திற்கு பின் எல்லா உண்மையும் வெளிவரும் வரவழைப்பார்கள்


N Sasikumar Yadhav
மே 15, 2024 00:27

விஞ்ஞானரீதியாக ஊழல் செய்து அதில் பங்கு கொடுக்கும் திருட்டு திராவிட கட்சிகளை பார்த்து வந்தவர்களுக்கு மோடிஜியை பார்த்தால் புள்ளிராஜா இன்டி கூட்டணியினருக்கு சந்தேகம் வரும்


Shankar
மே 14, 2024 19:21

கடந்த ஐந்து வருடங்களில் பிரதமருடைய சொத்து மதிப்பு ஐம்பது லட்சம் ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது இவருடைய நேர்மையை காட்டுகிறது


ديفيد رافائيل
மே 14, 2024 19:39

இது அதிகாரப்பூர்வமாக கணக்கில் காட்டப்பட்டது மட்டும் தான் கணக்கில் வராதது எவ்வளவு இருக்குமோ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை