உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவிலில் பிரார்த்தனையை தொடர்ந்து பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்பு

அயோத்தி ராமர் கோவிலில் பிரார்த்தனையை தொடர்ந்து பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி :உ.பி., மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ராமர் கோவிலில் பிரார்த்தனை நடத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ரோடு ஷோவிலும் பங்கேற்றார். நாடு முழுவதற்குமான பொது தேர்தல் ஏப்.,19 ம் தேதி துவங்கி ஜூன் 1-ம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உ.பி., மாநிலத்தை பொறுத்த வரையில் ஏழு கட்டங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரையில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்து உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ( மே.,05-ம் தேதி) அயோத்திக்கு வருகை தந்தார். அங்கு அவர் ராமர் கோவிலில் பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அயோத்தி நகரில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்றார். பேரணியில் முதல்வர் யோகி பங்கேற்றார். அவர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோ சுக்ரிவா கோட்டை முதல் லடா சவுக் வரையில் நடைபெற்றது. அயோத்திக்கு வருகை தந்த பிரதமருக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அயோத்தி நகர மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் 20-ம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்ட தேர்தலில் அயோத்தி தொகுதிக்கும், ஜூன் 1-ம்தேதி நடைபெறும் ஏழாம் கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 4 மாதங்களில் 2-வது முறையாக ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார் பிரதமர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மே 05, 2024 23:29

அசராமல் நடிக்கிறாரே!


Kanagaraj M
மே 05, 2024 21:30

அடிக்கடி கோவில் சென்று வழிபடுபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று சொல்லிவிடமுடியாது அல்லவா


Nagendran,Erode
மே 06, 2024 06:34

இப்படி சொல்ல உனக்கு தைரியம் எப்படி வந்தது?


vasooshiv
மே 08, 2024 14:42

சாமி கும்பிடறவங்களை நம்பாதீர்கள்


Priyan Vadanad
மே 05, 2024 20:34

பாஜக ஆதரவு செய்திகளாகவே இருக்கிறது குறித்து பெருமைப்படுகிறேன்


Chandran,Ooty
மே 06, 2024 05:57

அப்படின்னா அப்பத்துக்கு மதம் மாறியதற்கு பெருமை படலையா?


Ramesh Sargam
மே 05, 2024 20:07

இந்திய கலாச்சாரத்துக்கு மிகவும் பொருத்தமான பிரதமர் திரு மோடி அவர்கள் மற்றவர்கள் யாரும் பொருத்தமில்லை


மேலும் செய்திகள்