உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர் சங்கத்தினர் மீது போலீஸ் வழக்கு

மாணவர் சங்கத்தினர் மீது போலீஸ் வழக்கு

புதுடில்லி:மத்திய கல்வி அமைச்சர் பங்களாவுக்குள் நுழைய முயன்ற மாணவர் சங்கத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்களா அருகே நேற்று முன் தினம், இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அமைச்சரின் பங்களாவுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர்.இந்நிலையில், அமைச்சர் பங்களா அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்கு சட்டவிரோதமாக கூடிய மாணவர் சங்கத்தினர் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ