உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில், சிறப்பு பிரிவில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் அனுபம் கச்சப். இவர், விருந்து ஒன்றில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ப நபர்கள் துப்பாக்கியால் அவரது முதுகில் சுட்டுவிட்டு தப்பினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ