உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைதி மர்ம மரணம்: ஹரியானா அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கைதி மர்ம மரணம்: ஹரியானா அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:பரிதாபாத்தில் 2013ம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மரணம் அடைந்த வழக்கில், ஹரியானா அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் சதேந்தர் கவுசிக்,32. கடந்த 2013ம் ஆண்டு உணவு சாப்பிட்டு விட்டு அதற்குரிய பணம் தரவில்லை என ஹோட்டல் உரிமையாளர் கவுசிக் மீது போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து, வழக்கு எதுவும் பதிவு செய்யாத என்.ஐ.டி., போலீசார், கவுசிக்கை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2013 ஜூலை 25ல் என்.ஐ.டி., போலீஸ் ஸ்டேஷனில் கவுசிக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யக் கோரி, சதேந்தர் கவுசிக் சகோதரர் ஆனந்தராய் கவுசி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹரியானா அரசு மற்றும் டி.ஜி.பி., பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரனயை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ