உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் பஸ் கவிழ்ந்து 2 பயணியர் பலி

தனியார் பஸ் கவிழ்ந்து 2 பயணியர் பலி

உத்தர கன்னடா : கவுரிபிதனுாரில் இருந்து தர்மஸ்தலாவுக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரு பயணியர் உயிரிழந்தனர்.சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுாரில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம், தர்மஸ்தலாவுக்கு நேற்று காலையில், 53 பயணியருடன் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரின் ஹொன்னாவர் சுலேமுர்கி அருகே வளைவில் திருப்பும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.இதில், துமகூரை சேர்ந்த லோகேஷ், 26, சிக்கபல்லாபூரை சேர்ந்த ருத்ரேஷ், 38, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கவுரிபிதனுாரை சேர்ந்த ரஜனி, 30, வலது கையை இழந்து படுகாயமடைந்தார்.மற்ற பயணியர் ஹொன்னாவர், உடுப்பி, ஷிவமொகா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹொன்னாவர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ