மேலும் செய்திகள்
பீஹாரில் மெட்ரோ ரயில் துவக்கம்
1 hour(s) ago
விஜயபுரா: பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை, வீட்டு வாசலில் வைத்துவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.விஜயபுராவின் சாளுக்கியா நகரில் வசிப்பவர் போலீஸ் பாட்டீல். நேற்று அதிகாலை மர்ம நபர்கள், இவரது வீட்டு முன், பச்சிளம் ஆண் குழந்தையை போட்டு விட்டுத் தப்பியோடினர். குழந்தை இறந்து கிடந்தது.இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மாணவியர், காலையில் கதவை திறந்தபோது, குழந்தையின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உடல் மீது கறுப்பு நிற கறைகள் இருந்தன. உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்திருக்கக் கூடும். இதை போலீஸ் பாட்டீல் வீட்டு முன்வைத்துச் சென்றிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.இதுகுறித்து, போலீசாருக்கு மாணவியர் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை கொண்டு சென்றனர். இதன் பெற்றோர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
1 hour(s) ago