உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு நிவாரணம்? பெஸ்காம் மறுப்பு

விவசாயிகளுக்கு நிவாரணம்? பெஸ்காம் மறுப்பு

பெங்களூரு: 'விவசாயிகள், தங்கள் நிலத்தில், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அமைத்தால் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்பது பொய்யான தகவல்' என, 'பெஸ்காம்' தெரிவித்து உள்ளது.'விவசாயிகள், தங்கள் நிலத்தில் மின்கம்பங்கள் அல்லது மின்மாற்றிகள் அமைத்திருந்தால், அரசு சார்பில் மாதந்தோறும் 5,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கும். 'மின் கம்பங்கள், மின்மாற்றிகளை அரசே நிர்வகிக்கும். இதற்காக சான்றிதழும் கிடைக்கும்' என, சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.எனவே விவசாயிகள், தங்கள் நிலத்தில் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் பொருத்த ஆர்வம் காண்பிக்கின்றனர். இது பொய்யான தகவல் என, பெஸ்காம் தெரிவித்துஉள்ளது.'எக்ஸ்' சமூக வலைதளத்தில், பெஸ்காம் நேற்று கூறியிருப்பதாவது:விவசாயிகள் தங்களின் நிலத்தில், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் பொருத்தினால், அரசு நிவாரணம் வழங்கும். விவசாயிகள் 2,000 முதல் 5,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தலாம் என, சமூக வலைதளத்தில் பரவியுள்ள தகவல் பொய்யானது. இது போன்று எந்த அறிவிப்பையும், பெஸ்காம் அல்லது கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடவில்லை.பொது மக்கள், விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளை தவறான வழியில் திருப்பும் தீய நோக்கில், இத்தகைய பொய்யான வதந்தியை பரப்பியுள்ளனர். இதை நம்பாதீர்கள். ஏதாவது சந்தேகம், குழப்பம் இருந்தால், பெஸ்காம் சகாயவாணி எண் 1912ல் தொடர்பு கொண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை