உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சணல் தயாரிக்கும் தொழிற்சாலையில் 18 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

சணல் தயாரிக்கும் தொழிற்சாலையில் 18 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

காம்ரி:சணல் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து 18 குழந்தைத் தொழிலாளர்களை டில்லி போலீசார் மீட்டுள்ளனர்.வடகிழக்கு டில்லியின் காம்ரி பகுதியில் சணல் பை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக காவல் துறைக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனம் புகார் செய்தது.அதன் அடிப்படையில் வருவாய்த்துறையினருடன் இணைந்து போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். சணல் தொழிற்சாலையில் பணிபுரிந்த 18 குழந்தைத் தொழிலாளர்களை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர்.பெரும்பாலான குழந்தைகள் 11 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் உத்தர பிரதேசம், பீகார், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இதுதொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர்கள் அஸ்லத், ராஜ்குமார், விக்கி உள்ளிட்ட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.குழந்தைகள் நலக் குழு முன் அனைத்து குழந்தைகளும் ஆஜர்படுத்தப்படுவர். அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை