உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூட்டிய வீட்டுக்குள் அழுகிய பெண் சடலம்

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய பெண் சடலம்

திலக் மார்க்கெட்:வடக்கு தில்லியின் திலக் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு லாஹோரி கேட் போலீசார் விரைந்தனர்.வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே போலீசார் சென்றனர்.அங்கே மிகவும் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. அதை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அவர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. அவருக்கு 50 முதல் 60 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் மரணத்துக்கான காரணம் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை