சக்லேஷ்புரா - பல்லுபேட் ரயில் இயக்கம் துவக்கம்
ஹாசன் : ஹாசனின் சக்லேஷ்புரா - பல்லுபேட் இடையே தண்டவாளத்தில் சரிந்த மண் அகற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து துவங்கியது.கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மலைப் பிரதேசங்களில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா - பல்லுபேட்டை இடையே ஆக., 10ம் தேதியன்று மண்சரிவு ஏற்பட்டது. இதனால், இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.தண்டவாளத்தில் சரிந்த மண்ணை, இரவு பகலாக பணியாற்றி, ஊழியர்கள் அகற்றினர். இதையடுத்து, நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள், மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.