உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணல் குவாரி வழக்கு: கலெக்டர்களை துன்புறுத்துவதா?: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

மணல் குவாரி வழக்கு: கலெக்டர்களை துன்புறுத்துவதா?: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி: மணல் குவாரி வழக்கில் தமிழக கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை தேவையின்றி தொந்தரவு தரக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, தமிழக அரசுத்துறை உயர் அதிகாரிகள், வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.இந்நிலையில் கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (மே 06) விசாரணைக்கு வந்தது. அப்போது, “மணல் குவாரி வழக்கில் மாவட்ட கலெக்டர்களிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால், தேவையில்லாமல் மாவட்ட கலெக்டர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது. கலெக்டர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. இவ்வாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

MADHAVAN
மே 09, 2024 15:44

தொல்லைதங்கமுடியாமல் மக்கள் படும்பாடு இன்னும் ஒருமாதம் தான் ஆட்சி ல கொள்ளை அடிப்பது


MADHAVAN
மே 09, 2024 15:42

நீதிமன்றத்துக்கு மதிப்பு குடுப்பது என்பது பிஜேபி ன் அகராதியில் கிடையாது, அப்படி மதிச்சு நடந்த காவேரில தண்ணி வரும்தானே ?


R Kay
மே 09, 2024 16:51

மத்திய அரசை மதிப்பதென்பது நீதிமன்ற அகராதியில் உண்டா?


Ramalingam Shanmugam
மே 09, 2024 11:46

முதலில் நீதி துறையில் சீர்திருத்தம் வேண்டும் மயிலே மயிலே இரா போடு என்று சொல்ல வேண்டும் குண்டு வய்த்த குற்ற வாளிகளுக்கு ராஜமரியாதி கொடுத்த கும்பல்


jayvee
மே 09, 2024 08:23

ஏன் அவர்களுக்கு கீழே அதிகாரிகள் இல்லையா? உச்ச நீதிமன்றமே அதிகாரிகளுக்கு குறிப்பாக அவர்கள் IAS என்பதாலேயே இப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் சொல்லிருப்பது வருந்தத்தக்கது


R Kay
மே 09, 2024 16:49

இவர்கள் IAS பரீட்சை எழுதி தேர்வுற்றவர்கள் அல்ல இவர்கள் promoted collectors


R Kay
மே 09, 2024 00:57

பிதற்றல் கருத்து அப்படியே வேலை செய்யும் எட்டு மணி நேரமும் இந்த promoted collectors அப்படியே மக்கள் நலனுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தது போல


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 08, 2024 14:11

செக் ரிட்டர்ன் கேஸ்கள் உடனக்குடன் விசாரித்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு கொடுத்து பாமர மக்களை நீதிபதிகள் வக்கீல்கள் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்


jayvee
மே 09, 2024 08:24

சினிமா பைனான்சியர் போட்ட வழக்கு என்றால் ஆறே மாதத்தில் தீர்ப்புகள் வந்துவிடும் இல்லையென்றால் வாய்தா மட்டுமே


Raja Guru
மே 08, 2024 09:54

அமலாக்க துறை ஒன்றிய அரசின் ஏவல் துறை


K.aravindhan aravindhan
மே 07, 2024 13:19

விசாரணைமுடியும் வரை வேலையை குறைத்துக்கொடுங்கள்


C. Sorna Rajeswari
மே 07, 2024 10:37

கலெக்டர்கள் என்றால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் அலைய விடக்கூடாது, காத்திருக்க வைக்கக் கூடாது அதெல்லாம் சரிதான் கலெக்டர் ஆபிஸிற்கு ஒரு மனு கொடுத்து விட்டு எத்தனை நாட்கள் சாமானிய மக்கள் அலைகிறோம் காத்திருக்கிறோம் என்று தெரியுமா? அவர்கள் ஒருநாள் காத்திருக்க மாட்டார்களா? தவறு செய்த தமிழக அமைச்சருக்கு ஆதரவாக கலெக்டர்களை வைத்து தமிழக அரசு நாடகம் நடத்துகிறது


a.s murthy
மே 08, 2024 15:57

கலெக்டர்களை காக்கவைக்க கூடாதாம் நிமிஷம் தாமதமாக வந்தால் அடுத்தவரை விசாரிக்க வேண்டும் என்றால் குறைந்தது மணிநேரம் தாமதமாகும் வந்தவரை கலெக்டரை முதலில் விசாரிக்கறேன் காத்திருக்கச் சொன்னால், அடுத்தவர் காலில் உள்ளதை கழட்டி அடிப்பார்


M Ramachandran
மே 07, 2024 10:00

அமலாக்க துறையின் விஷயங்களில் நீதி மன்றம் தலையிடாமல் இருப்பதே சிறந்தது எல்லாம் கல்லுளி மாங்கனிகள் Fraud செய்வதில் கை தேர்ந்த இல்லாடி எப்படி அணுகுவது இதிலெல்லாம் கருணைய காட்டுதல் அவர்கள் தப்ப விடுவதற்கு ஓப்பாகும்


a.s murthy
மே 08, 2024 16:06

ஆமாம் நீதித்துறை இப்படி உத்தரவிடுவது? கலெக்டர்கள் வெறும் தமாஷ் விசாரனை அல்ல தவறு செய்ததால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் விசாரணை நீதிபதி, கலெக்டர், வக்கீல்கள் எப்போதும் கூடாதென்பதில்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி