உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் விஞ்ஞானிகளுக்கு தடை

வயநாடு நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் விஞ்ஞானிகளுக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடில் நிலச்சரிவு பாதித்த மெப்பாடி பஞ்சாயத்துக்கு மீட்புப் பணியாளர்களை தவிர விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்ய வரக்கூடாது என, மாநில பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலர் டின்கு பிஸ்வால் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “பேரிடர் பாதித்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றால், கேரள பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். ''விஞ்ஞானிகள் ஊடகங்களுக்கு வரம்பின்றி பேட்டி தரக்கூடாது. நிலச்சரிவு குறித்து பல்வேறு நிபுணர்களின் கருத்துக்கள், அதற்கு எதிர் கருத்துக்கள் என்று பரவி வருகின்றன. பேரிடரின் போது இது போன்று நடந்துகொள்ளக் கூடாது. அது மக்களை திசை திருப்பும். ஆய்வுகள் தேவைப்பட்டால் அவற்றை பின்னர் செய்துகொள்ளலாம்,” என்றார்.

விஞ்ஞானிகளுக்கு தடை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN MANOHARAN (மனோப்பையூரான்)
ஆக 02, 2024 21:48

கேரளா வயநாடு நிலச்சரிவு மற்றும் எல்லா நாடுகளிலும் ஆறுகள் நதிகள் அருவிகளின் இயற்கை சீற்றம் ஏன்? ஏன்? மனித உயிர்கள் இயற்கை சீற்றங்களினால் பலி ஏன்? ஏன்? ஏனிந்த இயற்கை சீற்றங்கள்? ஏனிந்த மனித உயிர்கள் பலி? ஏன்? ஏன்? மனிதர்களின் பேராசை மனிதர்கள் இயற்கையை நசுக்கும் அனுபவிக்கும் ஆனந்தம் நீர்நிலைகளை சுரண்டி சுருக்கி தன் நலத்திற்கான வாழும் கான்கிரீட் கட்டிடங்களை கட்டுதல் முறையற்ற வாழ்க்கைமுறை மனிதன் திருந்துவானா? உணர்வானா? இன்னொருவர்தானே பலியாகின்றார்கள்? நமக்கென்ன என்று மனிதன் இருப்பானா? கற்பானா? ஏன்? ஏன்? உணருங்கள் மானிட பதர்களே


s chandrasekar
ஆக 02, 2024 15:03

தில்லு முள்ளு தில்லு முள்ளு. ஓரம் போ ஓரம் போ.


s chandrasekar
ஆக 02, 2024 15:01

உண்டியல் குலுக்க தடை விதிக்குமா கம்யூனிஸ்ட் அரசு.


ராமகிருஷ்ணன்
ஆக 02, 2024 07:46

ஏனென்றால் கம்யூனிஸ்ட் அரசின் தகிடுதத்தம், இண்டி கூட்டணி ஓட்டுக்காக செய்த மோசடிகள் எல்லாம் வெளியே வந்து விடும். இனிமேல் இம்மாதிரியான நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க ஆலோசனைகளை விஞ்ஞானிகள் சொன்னா கேட்குற அறிவு கிடையாது.


GMM
ஆக 02, 2024 07:29

விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்ய கேரளா மாநில நிர்வாகம் தடை. ஏன் அரசியல் கண்ணோட்டம். பேரிடர் தேசிய பிரச்சனை. மக்களை அந்நிய எதிரிகளிடம் இருந்து எந்த கட்சி ஆண்டாலும் பாதுகாப்பது மத்திய அரசு. மத்திய அரசின் துறை போன்று மாநிலங்கள் நிறுவி, அதிகாரம் வகுத்து சர்வாதிகாரம் செய்து வருகின்றன. பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு பொறுப்பு இல்லாத நிலையில், மாநிலங்கள் அதிகாரம் குறைத்து மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரம் அதிகரிக்க வேண்டும். பேரிடர், சுற்று சூழல், கல்வி.. போன்ற தேசிய பணிகளின் மீது மாநில அதிகாரம் நீக்க வேண்டும். மாநில குழப்பம் விளைவிக்க, அரசியலுக்கு மட்டும் தான் உதவும். மக்களுக்கு உதவாது. யோகி போன்ற முதல்வர் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை போன்று வாக்கு கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் எடுப்பது இல்லை. தீவிர வாத புகலிடமாக சில மாநிலங்கள் மாறிவிட்டன.


Kasimani Baskaran
ஆக 02, 2024 05:56

கம்முனிச சர்வாதிகாரம் என்பது இதுதான். தார்மீக ரீதியாக துயரம் நடந்துள்ள பொழுது ஆய்வுகள் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை.


அஜய் சென்னை இந்தியன்
ஆக 02, 2024 05:29

இது தான் இவர்கள் ஜனநாயகம், மக்கள் உரிமை, மாநில உரிமை....இப்படி இவர்கள் ஆட்சியில் நடைபெறும் குறைகளை யாரும் சுட்டிக்காட்டி விட கூடாது என்று தடை போடுவது எப்படி பட்ட கொடுமையான அடக்கு முறை ஆட்சி நடை பெறுகிறது என்று இந்த ஒரு விசயம் சாட்சி. ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொண்டேன், அரசியல் வாதிகள் தான் உலகிலே மிக பெரிய ஆபத்தான மனிதர்கள். இதில் நல்லவர்களும் இருக்கலாம் நான் கை விட்டு எண்ணிவிட முடியும். அதில் மோடி, யோகி ஆதியனாத், அண்ணாமலை. ஜெய் சங்கர்,ஆனால் நல்ல அரசியல்வாதிகள் அனைவரும் வலது சாரி அரசியல் சிந்தனை கொண்டவர்கள் தான். ஆனால் இடது சாரி அரசியல் சிந்தனை கொண்டவர்கள் இந்திய தேசத்தில் மீது அன்பு கொண்டவராக இருப்பது இல்லை. இடது சாரி அரசியல்வாதிகள் மனநிலை மாநில மொழி, இனம், ஜாதி போன்ற அரசியல் தான் செய்கிறார்கள். ஆனால் இங்கு மதம் சார்ந்த அரசியல் என்பது வெறும் நாடகம் தான் மத அரசியலை விட.... லஞ்சம், vote க்கு பணம், இலவசம், போலியான உதவி தொகை (இப்போ இருக்க விலைவாசியில் 1000,2000,3000,4000,5000 என்ற உதவி தொகை எல்லாம் ஒரு பெரிய தொகை இல்லை. இன்று ஒருவர் குடும்பம் நடத்த மாதம் மாதம் 15000 முதல் 25000 வரை குறைந்த தொகை தேவை படும் போது. 1000 to 2000 என்ற உதவி தொகை அறிவிப்பு எல்லாம் மக்களை முட்டால் அக்கும் அரசியல் தான். மக்களின் வரி பணம் எல்லாம் போலியான இலவசம், உதவி தொகை என்ற பெயரில் உழல் தான் நடை பெறுகிறது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ