மேலும் செய்திகள்
மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி
2 hour(s) ago | 12
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
5 hour(s) ago
தங்கவயல், : ''லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் தைரியமாக வந்து ஓட்டுப் பதிவு செய்யலாம். அதற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,'' என, தங்கவயல் மாவட்ட எஸ்.பி., சாந்தராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் பங்கார்பேட்டை ஜூனியர் கல்லுாரி மைதானம், தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸில் சிவில், ரிசர்வ் போலீஸ், ஆயுதப் படை, ரயில்வே போலீசாருடன் துணை ராணுவம், ஊர்க்காவல் படையினருடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி உள்ளோம்.அரசியல் கட்சிகளின் ஊழியர்கள், வேட்பாளர்களுடன் அடையாளம் காட்டக்கூடாது. எங்கு புகார் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குள், தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் கவனித்தல் அவசியம்.சோதனைச் சாவடிகள் அமைத்து, உள்ளே வரும், வெளியேறும் வாகனங்களை கட்டாயம் சோதனை செய்ய வேண்டும். சட்டவிரோதமாக விலைமதிப்பற்ற பொருட்கள், பரிசுப் பொருட்கள், பணம் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யப்படும்.பொது இடங்களில் யாரும் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோத சக்திகள், ரவுடிகள், வழிப்பறி செய்வோரை கண்காணிப்பது முக்கியம். இத்தகைய நபர்களின் நடமாட்டம் குறித்து ரகசியமாக கண்காணிக்க வேண்டும்.கோலார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட தங்கவயல், பங்கார்பேட்டை பகுதியில் சட்ட விரோத சம்பவம் நிகழ்ந்தால் நடவடிக்கை எடுக்க தவற கூடாது. சட்டவிரோத மது விற்பனை மற்றும் வினியோகத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.தங்கவயல் போலீஸ் மாவட்டத்தின் எல்லைக்குள் பதற்றம் மற்றும் மிக பதற்றமான இடங்களில் பாதுகாப்பு நலன்கருதி போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 30 கண்காணிப் பாளர்கள், 8 சோதனைச் சாவடிகள், 2 கியூ.ஆர்.டி., வெடிகுண்டு சோதனைப் பிரிவு போலீசார், மாவட்டம் முழுதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரோந்துப் பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பணியில் ஒரு போலீஸ் எஸ்.பி., இரண்டு டி.எஸ்.பி., ஒன்பது இன்ஸ்பெக்டர்கள், 25 எஸ்.ஐ.,க்கள், 83 உதவி எஸ்.ஐ.,கள், 245 தலைமை ஏட்டுகள், 336 போலீசார், 81 பெண் போலீசார், 235 ஊர்க்காவல்படையினர், 222 ரிசர்வ் போலீஸ் படையினர், 393 கே.எஸ்.ஆர்.பி., குழுக்கள், 93 பாரா மிலிட்டரி எனும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை வீரர்கள் உட்பட 1,500 போலீசார் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.எனவே, லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கலாம். சட்ட விரோத செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையம், வயர்லெஸ் மைய தொலைபேசி எண்கள் 112, 08153- 274743, 274292 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.ஓட்டுச்சாவடிகள், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கிட் மற்றும் புரிதல் புத்தகம் வழங்கப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2 hour(s) ago | 12
5 hour(s) ago