உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாருக்கு ஆட்சி? : பரபரப்பு கருத்து கணிப்பு

யாருக்கு ஆட்சி? : பரபரப்பு கருத்து கணிப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலின் 'ரியல்' முடிவு நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், அதன், 'ரிகர்சலாக' ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகள் நேற்று வெளியாகின. யாருக்கு ஆட்சி கிடைக்கும் என, பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகின் மிகப் பெரும் தேர்தல் திருவிழாவான லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக ஏப்., 19ல் துவங்கி நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p82hp4et&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், மூன்றாவது முறையாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவரும்.

பா.ஜ., ஆட்சி

இந்நிலையில் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளை பல்வேறு ஊடக அமைப்புகள் நேற்று வெளியிட்டுள்ளன. அனைத்து கணிப்புகளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன.அதே நேரத்தில், பா.ஜ.,வின் இலக்கான தனிப்பட்ட முறையில் 370 தொகுதிகள் மற்றும் கூட்டணிக்கு, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி என்பதற்கு சாத்தியமில்லை என்று கணிப்புகள் கூறுகின்றன.இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி, 295 இடங்களில் வெற்றி பெறும் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று காலை நடந்த கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் தெரிவித்தார். அதற்கும் வாய்ப்பு இல்லை என்று, கணிப்புகள் கூறுகின்றன.மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், ஆட்சி அமைக்க, 272 தொகுதிகளில் வெற்றி என்ற பெரும்பான்மை தேவை. நேற்று வெளியான அனைத்து கணிப்புகளின்படியும், இந்த 'மேஜிக்' எண்ணை, பா.ஜ., கூட்டணி சுலபமாக தாண்டிவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.கணிப்புகளின் சராசரியை பார்க்கும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி, 366 இடங்களையும், இண்டியா கூட்டணி, 144 இடங்களையும் பிடிக்கும். இதில், பா.ஜ., தனிப்பட்ட முறையில், 327 இடங்களையும், காங்கிரஸ், 52 இடங்களையும் பிடிக்கும் என, கூறப்பட்டுள்ளது.தென் மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் கூடுதலாக கிடைக்கும் தொகுதிகள் வாயிலாக, பா.ஜ.,வின் மற்றொரு பிரமாண்ட தேர்தல் வெற்றி உறுதியாகியுள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ., தேர்தலை சந்திக்கும் ஆந்திராவில், மொத்தமுள்ள 25ல், 18ஐ கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பின்னடைவு

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், கடந்த தேர்தலைப் போலவே, பா.ஜ., அனைத்து தொகுதிகளையும் அள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதுபோல தெலுங்கானாவில் சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி வலுவாக இருந்தாலும், மொத்தமுள்ள, 17 தொகுதிகளில், பாதிக்கு மேல் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என, கூறப்படுகிறது.தமிழகத்தில் தாமரை மலரும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. புதுச்சேரியையும் சேர்த்து, மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 1 முதல் 5 இடங்களில் பா.ஜ., வெல்ல வாய்ப்புள்ளதாக பல கணிப்புகள் கூறுகின்றன.சிம்மசொப்பனமாக விளங்கும் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு, பா.ஜ., அதிர்ச்சி அளிக்கும் என, கணிப்புகள் கூறுகின்றன.இங்கு மொத்தமுள்ள, 42 இடங்களில், பா.ஜ., 18 முதல் 22 இடங்களை கைப்பற்றலாம் என, கூறப்படுகிறது. மம்தா கட்சிக்கு, அதிகபட்சம், 19 இடங்களே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.குஜராத், ம.பி., உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சல், டில்லியில், பா.ஜ., பெரிய அளவில் தொகுதிகளை அள்ளும் என்று கூறப்படுகிறது.அதே நேரத்தில், கடந்த தேர்தலில், 40 இடங்களில், 39ல் வெற்றி கொடுத்த பீஹாரில், சற்று பின்னடைவு ஏற்படும். ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஏழு இடங்களில் வெல்லும் என, கணிப்புகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Prabahara Lingan
ஜூன் 03, 2024 11:20

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டு மக்களுக்கு சிறந்த கல்வி வேலை வாய்ப்பு மக்களாட்சி தத்துவம் பேணி பாதுகாக்க வேண்டும்.


Kannappan Ramanathan
ஜூன் 03, 2024 00:28

வருகிற ஜூன் 4ஆம் தேதி, அதாவது குரோதி வருடம், வைகாசி 22ஆம் நாள் அன்று பிஜேபி எதிர்ப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய நடைமுறைகள். 1. மனதளவில் எதையும் தாங்கக்கூடிய வலிமையை பெற இறைவனை வேண்டுங்கள். 2. Hypertension அதாவது ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், தங்களது குடும்ப மருத்துவரை அணுகி தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் டோஸ் அதிகப்படுத்த வேண்டுமா என்று மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். 3. முடிந்த வரை சன் டிவி மறறும் கலைஞர் டிவி மட்டும் பார்க்கவும், காரணம் அவ்விரு சேனல்கள், பிஜேபி 400 சீட்டுகளை கடந்தாலும் மாலை வரை குறைவாகவே காண்பித்து முடிந்தவரை உங்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பார்கள். 4. சரக்கு ஸ்காட்ச்சாக இருந்தாலும் சரி நம்ம லோக்கல் டாஸ்மாக்காக இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தவும். காரணம் கண்ணாடி டம்ளராக இருந்தால் ஒருவேளை கோபத்தில் உடைத்து வீணாக நேரிடும். 5. டிவியில் இருந்து சற்று தொலைவில் அமர்ந்து பார்க்கவும், ஏனெனில் அது காசு கொடுத்து வாங்கிய TV என்பதையும் மறந்து கோபத்தில் அதை உடைக்கும் வாய்ப்புள்ளது. 6. மனைவி மற்றும் குழந்தைகளை உங்கள் மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது. காரணம் உங்கள் கோபத்தை அவர்கள் மீதும் காட்ட வாய்ப்புள்ளது. 7. முடிந்த வரை அலைப்பேசி அழைப்புக்களை தவிர்ப்பது நலம். காரணம், உங்களை வெறுப்பேற்ற என்னைப்போன்ற சங்கிகள் அழைக்கக்கூடும். பிறகு நீங்கள் அந்த அலைப்பேசியை வீசி எறிந்து உடைக்க நேரிடும். 8. நீங்கள் அமரும் இருக்கை நல்ல திடமாக உறுதியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். காரணம் 400 ஐ கடக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு சரிந்து விழக்கூடும் 9. எந்தச் சூழ் நிலையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். தேவைப்பட்டால் ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறவும் 10. முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள மன நல மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும். உங்கள் நலன் கருதி நான் ?


Thirumalaimuthu L
ஜூன் 03, 2024 01:59

????சிறப்பு ??


Selva
ஜூன் 03, 2024 07:40

வாய் விட்டு சிரித்தேன்.


R KUMAR
ஜூன் 02, 2024 21:39

ஊடகங்களுக்கு தேவையான நிதி பெறப்பட்டுவிட்டது, வாங்கிய தொகைக்கு நாங்கள் ஊளையிட்டுவிட்டோம். இல்லாவிட்டாலும், செய்யாறு பக்கத்தில் உள்ள கிராமத்தில் வசித்துவரும் சந்திரனை, இல்லை சூரியனை, இல்லை நாகமுத்துவை அழைத்துவந்து ஒரு நேரடி காட்சி நடத்தி அவர் இந்த தேர்தலில் எவ்வாறு காங்கிரஸுக்கு வோட்டு போட்டார் என்றும் அதற்க்கு திண்ணையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நான்கு பேரை அழைத்துவந்து ஒரு நேரடிவிவாத ஒளிபரப்பு செய்வோம்.


A1Suresh
ஜூன் 02, 2024 20:53

பாகிஸ்தான் மக்கள் தாமாகவே திசைக்கு ஒரு நாடாக பிரிந்து போவார்கள். ஏற்கனவே கைபர்-பக்தூன்வா ஆப்கானிஸ்தானுடன் செல்ல போராடுகிறது. பலூசிஸ்தான் தனிநாடு கேட்கிறது. பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் கலவரங்கள் நடக்கின்றன. இவற்றுள் ஒன்று பிரிந்தாலும் மற்றையோரும் பிரிந்து போவார்கள். போதாக்குறைக்கு பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்ஜிட்-பல்டிஸ்தான் ஷியா மக்கள் பெரும்பான்மை. முசாபராபாத் பகுதியில் சன்னி மக்கள்.


J.V. Iyer
ஜூன் 02, 2024 19:25

இந்த கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய். மக்கள் நீதி மைய்யமும், நான் தமிழர் கட்சியும், விசிகவும் மத்தியில் கூட்டணி அரசு அமைக்கும் என்று அந்த கட்சியினர் விரும்புவது தெரிந்ததே. ஹீ.. ஹீ..


SP
ஜூன் 02, 2024 18:13

பிரதமருக்கு இணையாக ஏன் ராகுல் படத்தை போடுகிறீர்கள்? சகிக்கவில்லை. ராகுல் பிரதமர் வேட்பாளர்கிடையாது.


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2024 18:10

இங்கு இருக்கும் பல கருத்து கணிப்பில் ராகுல் போட்டோ ஏன் என்று உள்ளது???அப்படியென்றால் இந்த தேர்தல் எண்ணிக்கை விளம்பரம் போடுபவர்களுக்கு. உயர்வான தொகை காங்கிரசால் வழங்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். வேடிக்கை என்னவென்றால் ராகுல் காந்தி யார்???முன்னாள் காங்கிரஸ் தலைவர்??அப்படியென்றால் சோனியாவை ஏன் போடவில்லை அவர் இத்தாலிய குடியுரிமையாளர்????கார்கேயை போட்டிருக்கலாம் ஏன் போடவில்லை???சிதம்பரம், சசி தரூர் .......இவர்கள் போட்டோவை என் போடவில்லை??? இதிலிருந்து தெரிவது ஒன்றேயொன்று தான் பணம் கொடுத்து ராகுலை மட்டும்போது எல்லா இடத்திலும் என்று ஆணை வந்தது என்று இருக்கும் அவ்வளவே


venugopal s
ஜூன் 02, 2024 17:21

இந்தக் கருத்துக் கணிப்பு நடத்திய ஊடகங்கள் எல்லாவற்றையும் பாஜக அதானி அம்பானி மூலமாக எப்போதோ விலைக்கு வாங்கி விட்டது!


Kasimani Baskaran
ஜூன் 02, 2024 15:13

மத்தியில் தீம்கா ஆட்சி அமைக்கும் என்றவுடன் ஏஐ பின்னி பெடலெடுத்து விட்டது "அதனை கணக்கில் எடைப்பெற்ற கெளயாது. குடியுரிமையை நம்புகிறோம் மருத்துவம், கல்வி மற்றும் உணவு அமைப்பு, ஆரஞ்சனைகள் மற்றும் நீங்கள் வேந்து வாக்கு அறிவுடன் உணர்ந்த நரம்பு வளர்க்கிறது.்ஒவ்வொரு பதிவுக்குமிடையோ உங்கள் பாதுகாப்பு மற்றும் நம் சமூகத்தின் வளர்ச்சி அவசியம்.இது தொடர்புள்ள குழுக்களுடன் பகிர்"


பேசும் தமிழன்
ஜூன் 02, 2024 13:30

இதிலே பப்பு படத்தை ஏன் போடுகிறார்கள் என்று தெரியவில்லை .....அந்த புள்ளி வைத்த இண்டி கூட்டணியில் யாருமே பப்புவை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை ....அப்படியிருக்க பப்பு ஃபோட்டோ எதற்க்கு ????


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ