உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாலிபருக்கு பாலியல் தொல்லை: சூரஜ் ரேவண்ணா மீது வழக்கு

வாலிபருக்கு பாலியல் தொல்லை: சூரஜ் ரேவண்ணா மீது வழக்கு

ஹாசன்: வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது.ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது மூத்த மகன் சூரஜ், 36. ம.ஜ.த.,- - எம்.எல்.சி., ஆக உள்ளார்.சூரஜ் உதவியாளர் சிவகுமார் என்பவர், ஹொளேநரசிபுரா ரூரல் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு புகார் அளித்தார்.

பணம் பறிக்க முயற்சி

அந்த புகாரில், அரிசிகெரேயை சேர்ந்த 36 வயது வாலிபர், அவரது உறவினருடன் சேர்ந்து, சூரஜ் ரேவண்ணாவை மிரட்டி, 5 கோடி ரூபாய் பணம் பறிக்க முயற்சி செய்வதாக கூறியிருந்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.நேற்று அரிசிகெரே வாலிபர் அளித்த பேட்டி:எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, என் மீது தான் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.சூரஜை நான் மிரட்டவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, அரிசிகெரேயில் ம.ஜ.த.,வுக்காக பிரசாரம் செய்தேன். இதனால் என்னை சூரஜ் பாராட்டினார். அவரது மொபைல் நம்பரை என்னிடம் கொடுத்தார்.கடந்த 16ம் தேதி என்னிடம் மொபைல் போனில் பேசினார். 'ஹொளேநரசிபுரா அருகே உள்ள கன்னிகடா பண்ணை வீட்டில் இருக்கிறேன். அங்கு வா' என என்னிடம் கூறினார். நானும் அங்கு சென்றேன்.

ஆபாசம்

சூரஜ் தவிர அங்கு யாரும் இல்லை. முதலில் என் தோள் மீது கையை போட்டார். பின்னர் எனது உடலை தடவி பாலியல் தொல்லை கொடுத்தார். அதன் பின்னர் என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார்.இதுகுறித்து சூரஜ் நெருங்கிய நண்பர் ஷிவு என்பவரிடம் கூறினேன். என்னிடம் பேசிய சூரஜ், 'பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். 1 கோடி ரூபாய் பணமும், வேலையும் வாங்கித் தருகிறேன். இதையும் மீறி வெளியே சொன்னால், சும்மா விட மாட்டேன்' என மிரட்டினார்.சூரஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர், உள்துறை அமைச்சர், ஹாசன் எஸ்.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் மீது போலீசில் புகார் அளிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.நேற்று இரவு ஹொளேநரசிபுரா ரூரல் போலீஸ் நிலையம் சென்று, சூரஜ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் சூரஜ் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது.இதுகுறித்து சூரஜ் கூறுகையில், ''எனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. விசாரணையில் உண்மை வெளிவரும். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. யார் மீதும் நான் குற்றச்சாட்டு கூற மாட்டேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை