உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகனை சுட்டு கொல்லுங்கள் கமிஷனரிடம் தந்தை கதறல்

மகனை சுட்டு கொல்லுங்கள் கமிஷனரிடம் தந்தை கதறல்

ஹூப்பள்ளி, “ரவுடியான என் மகனால் மானம், மரியாதை போய்விட்டது; அவனை சுட்டுக் கொல்லுங்கள்,” என, போலீஸ் கமிஷனரிடம் ரவுடியின் தந்தை கண்ணீர்விட்டு கதறினார்.கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி, கசபாபேட்டையைச் சேர்ந்தவர் முகமது கவுஸ், 65; சைக்கிளில் டீ வியாபாரம் செய்கிறார். இவரது மகன் அப்தாப் கரிகுட்டா, 35. ரவுடியான இவர் மீது, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அப்தாபும், அவரது கூட்டாளிகளும், எதிர்கோஷ்டி ரவுடி கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு சென்ற போலீசார், அப்தாபை கைது செய்ய முயன்றனர்.அப்போது, கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற அப்தாபை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.நேற்று காலை அப்தாப் வீட்டிற்கு, ஹூப்பள்ளி - தார்வாட் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் சென்றார்.அப்தாபின் தந்தை முகமது கவுசிடம், “உங்கள் மகனுக்கு பாடம் புகட்டுங்கள்; இல்லாவிட்டால் நாங்கள் புகட்டுவோம்,” என்றார்.அப்போது சசிகுமாரின் கையை பிடித்துக் கொண்டு, “என் மகனால் மானம், மரியாதை போய்விட்டது; தயவு செய்து அவனை சுட்டுக் கொல்லுங்கள்,” என, முகமது கவுஸ் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சசிகுமார், முகமது கவுசை சமாதானப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Training Coordinator
ஆக 29, 2024 09:22

ஏன் எதுக்கெடுத்தாலும் காங்கிரஸ் தானா, நீ பிறந்ததற்கும் காங்கிரஸ் தான் காரணமோ


Venkatesan
ஆக 23, 2024 11:51

போட்டு தள்ளுங்க சார் இந்த மாதிரி ரவுடி பயலுவள . தயா தாட்சண்யமே காட்ட கூடாது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 14:07

இவர் சினிமா டிவி சீரியல் நிறைய பார்ப்பார் போல். சம்பந்தமே இல்லாமல் அனுதாபம் வரவழைத்து இதன் மூலம் தனது மகனை காப்பாற்றி விட்டார். இப்போது உண்மையிலேயே இவருடைய மகன் போலீஸ் காவலில் ஏதாவது தில்லு முல்லு செய்தால் கூட என்கவுண்டர் செய்ய போலீஸே பயப்படும். திறமையான அப்பா. காக்கைக்கும் தன் குஞசு பொன் குஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள். ஆனால் இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் ஆட்கள். போலீசும் பொது மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


Ram pollachi
ஆக 22, 2024 12:44

எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற இப்படி தான் சொல்வார்கள். பிறகு நெருக்கமானவர்களிடம் சொல்லி ஜாமீன் வாங்குவார்கள்... கைதிகளுக்கு ஜெயிலில் உணவு குடிநீரை கண்ணில் காட்ட வேண்டாம் பிறகு தவறு செய்ய யோசிப்பார்கள்...


குமார்கான்
ஆக 22, 2024 07:54

வகர்ப்பு சரியில்லை. இன்னிக்கி அழுதா என்ன பிரயோசனம்?


subramanian
ஆக 22, 2024 07:46

அந்த அப்பா சொல்வது சரி


N.Purushothaman
ஆக 22, 2024 06:56

சேர்க்கை சரியில்லைன்னா இப்படித்தான் .....வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ...


சண்முகம்
ஆக 22, 2024 06:03

மானம் பெரிது என்று கருதும் மிகச்சில இந்தியர்களில் ஒருவர்.


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:26

காங்கிரஸ் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.


Matt P
ஆக 22, 2024 03:18

முப்பத்தஞ்சு வயசு மகனுக்கு பாடம் புகட்ட காவல் அதிகாரி சொல்லியிருக்க்கிறார். இவரு அவரிட்ட சொல்வதும் தவறு தான். அவனே ஒரு ரவுடி. பாடம் புகட்டும்போது அவருக்கே ஆபத்தா முடியலாம். ஒரு காவல் அதிகாரி நீதியை கையில் எடுத்து கொண்டு அப்பா சொல்லுகாரு என்றே இவர் மகனை சுட்டுவிடவும் முடியுமா? தலைக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன் என்பார்கள். எதையும் எப்போவும் கவனமா கையாளனும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை