உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுளே ஓய்வெடுக்கும் போது முதல்வர் ஓய்வெடுக்க கூடாதா?

கடவுளே ஓய்வெடுக்கும் போது முதல்வர் ஓய்வெடுக்க கூடாதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்,'உலகத்தை ஆறு நாளில் படைத்த கடவுளே ஏழாவது நாள் ஓய்வெடுத்துள்ளார். அப்படி இருக்கையில், தேர்தலுக்காக கடுமையாக உழைத்த முதல்வர் பினராயி விஜயன் ஓய்வெடுக்கக் கூடாதா?' என, அவரது வெளிநாட்டு பயணத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் நியாயப்படுத்தி உள்ளனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு லோக்சபா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ஓய்வெடுப்பதற்காக தன் குடும்பத்தினருடன் கடந்த 6ம் தேதி இந்தோனேஷியாவுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வரின் இந்த பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. முதல்வருக்காக வேறு யாரோ செலவு செய்து அழைத்து செல்வதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பாலன் நேற்று கூறியதாவது:

முதல்வர் விண்வெளிக்கு சென்றுவிடவில்லை. அவர் இந்தோனேஷியாவுக்கு தான் சென்றுள்ளார். அந்தமான் தீவில், 'இந்திரா பாயின்ட்' பகுதியில் இருந்து அந்த நாடு 60 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது. நவ கேரள சதஸ் திட்டத்துக்காக மாநிலம் முழுதும் 30 நாட்கள் அவர் பயணம் மேற்கொண்டார். ஒரு நாளில் நான்கு மணி நேரம் பொதுக்கூட்டங்களில் பேசினார். தேர்தலுக்காக கடுமையாக உழைத்த முதல்வர் ஓய்வெடுப்பதில் என்ன பிரச்னை? உலகத்தை ஆறு நாட்களில் படைத்த கடவுள் கூட, ஏழாவது நாளான ஞாயிற்றுக் கிழமை ஓய்வெடுத்ததாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, கேரள மக்களின் நலனுக்காக ஓய்வின்றி உழைத்த முதல்வர் தற்போது ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

shyamnats
மே 11, 2024 12:28

கடவுள் லெவலுக்கு பினராய் உயர்ந்து விட்டார் என்று சொல்லுகிறாரா ? ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா அடிக்கும் தொல்லை தாங்க முடியவில்லை


ஆரூர் ரங்
மே 11, 2024 11:27

கடவுள் ரெஸ்ட் எடுக்கும் போது ஆட்டம் இருக்குமே.


angbu ganesh
மே 11, 2024 09:31

கடவுள் ஓய்வு எடுக்கறாரா, அதுக்கு நீங்க ஒரு சான்று கடவுளே


சுந்தரம் விஸ்வநாதன்
மே 11, 2024 09:15

உழைக்கும் தோழர்கள் ஓய்வே எடுப்பதில்லை ஆனால் அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் தலைவர்கள் மட்டும் ஓய்வுக்கு வெளிநாட்டுக்கே செல்வதுதான்


குமரி குருவி
மே 11, 2024 08:26

கொள்ளையடித்தால் தலைமறைவு அவசியமே


குமரேஷ்
மே 11, 2024 07:53

எந்தக் கடவுளின் உதவியாளி தங்கம் கடத்தி பிடிபட்டு ஜெயிலில் இருக்கங்க


cbonf
மே 11, 2024 07:45

கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள் நம்பிக்கை எப்போது வந்தது? இது தங்கக்கடத்தல் சீரியல் என்றுதான் தோன்றுகிறது


RAJ
மே 11, 2024 07:36

கேரளாவின் தங்க மகன் ரெஸ்ட் எடுக்கட்டும், கடவுள் கூட compare பண்ற அளவுக்கு என்னப்பா சாதிச்சார்??


Kasimani Baskaran
மே 11, 2024 07:22

முரண்பாடுகளின் பிறப்பிடம் இந்தியாக் கூட்டணி என்பதை நாசூக்காக சொல்றாப்ல இந்த முரண்பாடுகள்


duruvasar
மே 11, 2024 06:53

உலகில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாரும் இப்படி ஓய்வெடுத்ததாக எந்த சரித்திரமும், பூகோளமும் இல்லையே ? தங்கமான மனிதர் தங்க போயிருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை