மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
பெங்களூரு : துணை முதல்வர் சிவகுமார் மீது காங்கிரஸ் மேலிடத்தில் புகார் அளிக்க முதல்வர் கோஷ்டியும்; முதல்வர் சித்தராமையா மீது புகார் அளிக்க, துணை முதல்வர் கோஷ்டியும் தயாராகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ், 9ல் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் கல்யாண கர்நாடகா மண்டலத்தில் தான் அதிகபட்ச வெற்றி கிடைத்தது.ஆனால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரின் தொகுதிகளிலேயே காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த தொகுதிகள், ஒக்கலிகர் அதிகம் கொண்ட பழைய மைசூரு மண்டலத்துக்குள் வருகிறது. எனவே, தோல்விக்கு காரணம் யார் என்பது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒருவர் மீது மற்றொருவர் வெளிப்படையாக குற்றம் சாட்டாமல் தங்கள் ஆதரவாளர்கள் வாயிலாக சொல்ல வைப்பது தெளிவாக தெரிகிறது என்று ஒரு அரசியல் விமர்சகர் தெரிவித்தார்.சிவகுமாரின் வேகத்தை குறைக்கும் வகையில், கூடுதல் துணை முதல்வர்கள் தேவை என்று முதல்வரின் ஆதரவாளர்களும்; தங்கள் தலைவருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்று சிவகுமார் ஆதரவாளர்களும் பேசி வருகின்றனர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது, போடப்பட்டதாக கூறப்படும் வாய்மொழி ஒப்பந்தப்படி, இன்னும் ஒன்றரை ஆண்டில் சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும். ஆனால், அவருக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க கூடாது என்பது சித்தராமையா ஆதரவாளர்களின் நோக்கம்.இந்நிலையில், லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருந்த துணை முதல்வர் சார்ந்த பெங்., வடக்கு, பெங்., ரூரல், மாண்டியா, மைசூரு, துமகூரு, சிக்கபல்லாப்பூர் போன்ற தொகுதி களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதனால், சிவகுமாரின் செல்வாக்கு குன்றி விட்டது என்று காங்கிரஸ் மேலிடத்தில் சித்தராமையா ஆதரவாளர்கள் புகார் அளிக்க திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு பதிலடி கொடுப்பதற்கு, சிவகுமார் மற்றொரு திட்டம் தீட்டி உள்ளார். அதாவது தனியார் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், முதல்வர் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், எஸ்.சி., - எஸ்.டி.,யினர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்காததால் தான், பழைய மைசூரு மண்டலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை தயாரித்துள்ளார்.இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி தலைமையில், 15 வீரசைவ லிங்காயத் எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட குழு, விரைவில் டில்லி சென்று, சித்தராமையா மீது புகார் அளிக்க தயாராகி வருகிறது.இதற்கு பதிலடியாக, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தலைமையில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா உட்பட மூத்த அமைச்சர்கள் சிவகுமார் மீது புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் யார் கை ஓங்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 hour(s) ago | 2
12 hour(s) ago