உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்து செய்த ஒப்பந்தம் ஜனார்த்தன ரெட்டி பரபர

சித்து செய்த ஒப்பந்தம் ஜனார்த்தன ரெட்டி பரபர

பெங்களூரு: ''கடந்த சட்டசபை தேர்தலில் சித்தராமையா, என்னுடன் ஒப்பந்தம் செய்ததால், கங்காவதி, பல்லாரியில் பிரசாரம் செய்யவில்லை,'' என, கங்காவதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.கொப்பால் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இரகலகாடா கிராமத்தில் நேற்று ஜனார்த்தன ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் அளித்த பேட்டி:கடந்த சட்டசபை தேர்தலின்போது, இக்பால் அன்சாரி, ஸ்ரீநாத், மல்லிகார்ஜுன நாகப்பா ஆகியோரை எனது வீட்டுக்கு அனுப்பிய சித்தராமையா, 'தேர்தலில் கர்நாடக ராஜ்ய பிரகதி கட்சி, பத்து இடங்களில் வெற்றி பெற்றால், ஆட்சி அமைக்க வசதியாக இருக்கும்' என்றார்.எங்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, சட்டசபை தேர்தலின்போது, கங்காவதி, பல்லாரியில் சித்தராமையா பிரசாரம் செய்ய வரவில்லை.கங்காவதியில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில், என்னை பற்றி மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் கட்சிக்குள்ளேயே சண்டை ஏற்பட்டது. முதல்வர் சித்தராமையா தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி