உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிறந்த நாள் வேண்டாம் சிவகுமார் உத்தரவு

பிறந்த நாள் வேண்டாம் சிவகுமார் உத்தரவு

பெங்களூரு: மாநிலத்தில் வறட்சி நிலவுவதால், இம்முறை தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என, துணை முதல்வர் சிவகுமார் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமாருக்கு, மே 15ல் பிறந்த நாள் வருகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை, ஆதரவாளர்கள், தொண்டர்கள் கேக் வெட்டி, ஆரவாரமாக கொண்டாடுவர். இம்முறையும் கொண்டாட்டத்துக்கு தயாராகின்றனர்.ஆனால் மாநிலத்தில் மழை பற்றாக்குறையால், வறட்சி நிலவுகிறது. 223 தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே தன் பிறந்த நாளன்று, வட மாநிலங்களில் சிவகுமார் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார். எனவே இம்முறை தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என, தன் ஆதரவாளர்கள், தொண்டர்களுக்கு சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ