| ADDED : மே 01, 2024 08:17 AM
பெங்களூரு : ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட துணை முதல்வர் சிவகுமாரின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவுகிறது.ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர், சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. வீடியோ, புகைப்படங்கள் வெளியானதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.இந்நிலையில் சிவகுமாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவர் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் சட்ட பிரிவினர், பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீசில் புகார் செய்தனர். பா.ஜ., தலைவர் ஒருவர் இளம்பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்திற்கு பதிலாக, சிவகுமார் புகைப்படத்தை வைத்து அவதுாறு பரப்புவதாக, புகாரில் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின்படி, சந்தோஷ், ராஜேஷ், கேசரி சாம்ராட் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.