உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ வீரர்களின் மனைவியர் தற்கொலை

ராணுவ வீரர்களின் மனைவியர் தற்கொலை

கொப்பால்: கொப்பால், பெலகாவியில் இரண்டு ராணுவ வீரர்களின், மனைவியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.கொப்பால், குகனுார் இடதி கிராமத்தை சேர்ந்தவர் பசவய்யா, 30. ராஜஸ்தானில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, பசவய்யாவுக்கும், வீணா, 25 என்பவருக்கும் திருமணம் நடந்தது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு பசவய்யா பணிக்கு திரும்பினார். மாமியார் வீட்டில் வசித்து வந்த, வீணா நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என்று தெரியவில்லை.* பெலகாவியின் காக்வாட் மோலே கிராமத்தை சேர்ந்தவர் பாலு, 35. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி ரூபா, 31. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.கடந்த சில மாதமாக ரூபாவுக்கு, மாமியார் செவ்வந்தி ரூபணவ்வர் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மனம் உடைந்த ரூபா நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை