உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டம் ஒழுங்கு நிலை என்ன?: டில்லியில் அமித்ஷா உடன் கவர்னர் ரவி ஆலோசனை

சட்டம் ஒழுங்கு நிலை என்ன?: டில்லியில் அமித்ஷா உடன் கவர்னர் ரவி ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்தார். அப்போது இருவரும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினர்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5f6zoekv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நமது மக்களை பாதிக்கும் பிரச்னைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும், மக்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது. இவ்வாறு கவர்னர் ரவிகூறியுள்ளார்.

உயர்கல்வியை உயர்த்த நடவடிக்கை

முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்தார். அப்போது இருவரும் கல்வித்துறையை மேலும் முன்னேற்றுவது மற்றும் தேசிய கல்விக்கொள்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ஆழ்ந்த அக்கறை

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு நன்றி. இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kesavan
ஜூலை 18, 2024 21:26

சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு ரவிக்கும் அருகதை இல்லை அமித் ஷாவுக்கும் அருகதை இல்லை


Kesavan
ஜூலை 18, 2024 20:31

எங்கள பாத்தா எப்படி இருக்குது கேனப்பயல்கள் என்று தோணுதா உங்களுக்கு


Godyes
ஜூலை 18, 2024 15:34

மேடை பேச்சுக்களில் பாமர மக்களையும் கவரும் வகையில் எதுகை மோனையுடன் பேச்ச்சாற்றல் பெற்ற ஆட்கள் இல்லை.அண்ணாமலை சாதாரண பேச்சாளர். பேச்சாளர்கள் பெயருடன் அடைமொழி பெயர்களுடன் மேடை ஏறவேண்டும்.உதாரணமாக சொல்லின் செல்வர் சிந்தனைசிற்பி நாவலர் போன்ற அடைமொழி பட்ட பெயர்கள் போல் பாஜக மேடை பேச்சாளர்களுக்கும் தேவை.


ஜும்லா சேகர்
ஜூலை 17, 2024 19:29

பூங்கொத்து குடுத்து தமிழகம் அமைதிப் பூங்காவிருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கே...


கடுகு
ஜூலை 17, 2024 17:20

இது புலி வருது கதைதான். திராவிடியாஸ் காட்டாட்சி அதுபாட்டுக்கு நடக்கும்.


MADHAVAN
ஜூலை 17, 2024 17:07

குஜராத், உத்திரபிரதேசம் மணிப்பூரைவிட தமிழகம் நன்றாக ருக்குனு சொல்லிருப்பாரு


SAKTHIVEL S
ஜூலை 17, 2024 16:32

தமிழகத்தில் டி என் பி எஸ் சி தேர்வில் ஊழல் நடந்தது இனிமேல் தேர்வே நடத்தாமல் நிறுத்திவிடலாமா.தகுதியானவர்கள் தேர்ச்சி பெற்று நீட். அல்லது வேலை வாய்ப்பை பெற தேர்வு நடத்தப்படுகிறது நீட் தேர்வை வைத்து தி.மு.க அரசியல் நடத்துகிறது நான் கேட்கிறே இனிமேல் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெற தகுதி தேர்வை நீக்குவார்காளா.


D.Ambujavalli
ஜூலை 17, 2024 16:28

இவர் ஷாவை சந்தித்து வருமுன்னே மதுரையில் அமைச்சர் வீட்டருகிலேயே ஒரு கொலை ஸ்டாலின் சொல்வாரே 'அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக சில 'சம்பவங்கள் ' நடப்பதால் சட்டம் ஒழுங்கு தவறி விடுமா? தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் இருக்கிறது' என்று


Mohan M
ஜூலை 17, 2024 15:19

why every now and then boquea or towel is presented.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 14:55

ஒன்றியம் அப்பப்போ பூச்சாண்டி காட்டிட்டே இருப்பாங்க ..... புலிகேசி மன்னருக்கே இது நல்லா தெரியும் ....


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை