உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛நீட் மறு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் வழக்கு

‛நீட் மறு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் வழக்கு

புதுடில்லி :மருத்துவப் படிப்பில் சேருவதற்காக இந்தாண்டு நடத்தப்பட்ட 'நீட்' தேர்வை ரத்து செய்து, புதிதாக நுழைவுத் தேர்வு நடத்தக் கோரியும், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், மாணவர்கள் சிலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cdkavjyu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

குற்றச்சாட்டு

நுழைவுத் தேர்வு,மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்காக, நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு, மே, 5ம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை, 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். சமீபத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாயின.கேள்வித்தாள் கசிந்தது, குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, இதுவரை இல்லாத அளவாக, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றது, அதிகளவு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது என, பல முறைகேடுகள் நடந்து உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., விசாரணை கோரி ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேர்வை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை உள்ளிட்டவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில், 20 மாணவர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தாண்டு நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சில மாநிலங்களில் கைது நடவடிக்கையும் நடந்து உள்ளது.குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துவது, தேர்வை எழுதிய மற்ற மாணவர்களுக்கான வாய்ப்பை பறிப்பதாக இருக்கும்.

தகுந்த விசாரணை

அதனால், இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., அல்லது தகுந்த விசாரணை அமைப்பின் வாயிலாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இதைத் தவிர, குறிப்பிட்ட சில மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ambrose wilfred
ஜூன் 17, 2024 20:09

நாம் நமது +2 mathiபெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கு மனவர்கலெய் சேர்ப்போம் .


vbs manian
ஜூன் 16, 2024 09:23

கருணை மதிப்பெண் வழங்கியது முக்கிய சர்ச்சை. மறுபடியும் தேர்வை நாடு முழுதும் நடத்துவது கல்வியாண்டு நீளும் தரவுகள் தாமதம் ஆகும். மேற்படிப்பு வசதிகள் பாதிக்கப்படும். வெறும் வாயை மென்றவருக்கு அவல் கிடைத்து விட்டது.


ஆரூர் ரங்
ஜூன் 16, 2024 03:15

வாய்ப்பு கிடைத்தால் முறைகேடுகள் மூலம் தேர்வாக லட்சக்கணக்கான சபல மாணவர்கள் உள்ளனர். இது சுதந்திர இந்தியாவில் தவறான வளர்ப்பு, ஒழுக்கமின்மையின் அடையாளம். அரசியல் தலைவர்களே ஐநூறு நோட்டு முதல் 8500 ரூபாய் இலவசங்கள் மூலம் வாக்குகளை விலை பேசி ஆட்சியைப் பிடிக்கும் காலத்தில் பொது மக்கள் மட்டும் நேர்மையாக இருப்பர் என எதிர்பார்க்கலாமா?


Saai Sundharamurthy AVK
ஜூன் 16, 2024 10:51

குறிப்பாக தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலை அதிகம் .....! பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம், வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு லட்சம் என்று ஊதி விட்ட காங்கிரஸுக்கு சம்மட்டியடி கொடுத்தது ஒடிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா மற்றும் கர்நாடகா..!!!!


கனோஜ் ஆங்ரே
ஜூன் 16, 2024 12:24

ஏய்யா... உன்னோட இப்ப பேசுற வாய் வேற வாயா...?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை