வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Very sad incident. How they going to manage another 30days for their needs.
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்பிட இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.ஜூன் 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். 9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தி திட்டமிட்டபடி கடந்த 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.தற்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இருவரும் மேலும் 30 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Very sad incident. How they going to manage another 30days for their needs.