உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மயில் கறிடா மாப்ளே; சப்புக்கொட்டி சாப்பிட்டார்: சர்ச்சை யூடியூபருக்கு காப்பு

மயில் கறிடா மாப்ளே; சப்புக்கொட்டி சாப்பிட்டார்: சர்ச்சை யூடியூபருக்கு காப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து, யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட நபரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.யூடியூப் நிறுவனம், வீடியோ பதிவிடுவோருக்கு கணிசமாக பணம் தருகிறது. எந்தளவுக்கு வீடியோ சர்ச்சையாகி, பலரது பார்வைக்கும் வருகிறதோ, அந்தளவுக்கு பணம் கிடைக்கிறது. போட்டி அதிகமாகி விட்டதால், யூடியூபர்கள் சிலர், கிறுக்குத்தனமான செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். இவர் யூடியூப் சேனல் ஒன்று வைத்துள்ளார். இவர், பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்துள்ளார்.

மயில் கறி

சில தினங்களுக்கு முன், பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டார். மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் அந்த வீடியோவை யூடியூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.

நடவடிக்கை

தேசியப் பறவையான மயிலை கொன்றதால், பிரணாய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. தற்போது பிரணாய் குமாரை போலீசார் கைது செய்தனர். பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SVK SIMHAN
ஆக 18, 2024 20:18

மனித விரோத செயல்கள் யாவையும் செய்கின்ற ஒவ்வொரு மனித சமூக அச்சுறுத்தல்கள் மற்றும் விரோதிகள் தாங்கள் செய்கின்ற தவறுகளுக்கு விளக்கு போட்டு நிரூபிக்க எவனைய்யா வெள்ளை அறிக்கை கொடுக்கிறான்??????? வாய்ச் சவடாலுக்கு தமிழகத்தை மிஞ்ச வாய்ப்பில்லை ??


Murugan
ஆக 15, 2024 14:59

இவனைப் போன்றவர்களை கொன்று நம் தேசிய விலங்கான புலி போன்ற விலங்களுக்கு போட வேண்டும்


Murugan
ஆக 15, 2024 14:56

இதுபோன்று மயிலினை கொள்பவர்களே அடித்துக் கொள்ள வேண்டும் இவனைக் கொன்று சிங்கம் புலி போன்ற மிருகங்களுக்கு போட வேண்டும் அப்பொழுதுதான் இவனைப் போன்றவர்கள் திருந்துவார்கள்


Mani . V
ஆக 13, 2024 04:54

இவனையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.


thamizhan
ஆக 12, 2024 14:11

அவர் மயிலை கொன்றதை யார் பார்த்தார்கள்.....


enkeyem
ஆக 12, 2024 17:20

அவனே யு டியூப் சானலில் வெட்டி சமைத்துமயில் கறிடா மாப்ளே என்று சப்புக்கொட்டி சாப்பிட்டு வீடியோவே வெளியிட்டுள்ளான். அவனது வாக்குமூலம் இதற்கு ஆதாரம். இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும் ?


vijai
ஆக 13, 2024 22:48

வாய மூடு அந்தக் பொறம்போக்கு சொல்லிட்டான் நீ என்ன வக்காலத்து


MP.K
ஆக 12, 2024 13:37

மயில் தேசிய பறவை மட்டுமல்ல அழிந்து வரும் பறவை இனத்தில் உள்ளது பல்லுயிர்பெருக்கம் தொடர்பான பிரச்சனை இது


N.Purushothaman
ஆக 12, 2024 12:25

இந்தியாவில் அசைவ பிரியர்கள் இப்போது எதை வேண்டுமானாலும் திங்கலாம் என்கிற மனநிலைக்கு வந்துள்ளது வருத்தமாகத்தான் இருக்கிறது ....


Venkatesan
ஆக 12, 2024 11:46

தேசிய பறவைன்னு கூட தெரியாம இவன் எல்லாம் யூ டியூப் சேனல் வச்சிருக்கான் இவனை எல்லாம் என்ன பண்ண.


விஜய்
ஆக 13, 2024 22:50

தேசிய பறவை பொறம்போக்கு தெரியும் இருந்தும் youtube பலர் பார்க்க வேண்டும் என்று அந்த பொறம்போக்கு செஞ்சிருக்கு


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி