உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் சிறுவன் பலி

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் சிறுவன் பலி

சிக்கமகளூரு, : சுற்றுலா பஸ் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், 6 வயது சிறுவன் பலியானார்.துமகூரு, சிராவை சேர்ந்த பலர் பஸ்சில், சிக்கமகளூருக்கு சுற்றுலா புறப்பட்டனர். இங்குள்ள மாணிக்யதாரா, முல்லையன கிரி, தத்த பீடம் என, பல இடங்களை பார்க்க திட்டமிட்டிருந்தனர்.சிக்கமகளூரின், சந்திரதுரோணா மலை இறக்கத்தில், நேற்று மதியம் பஸ் சென்றது. திருப்பு முனையில் செல்லும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.தகவலறிந்து அங்கு வந்த, சிக்கமகளூரு போலீசார், பஸ்சில் சிக்கியிருந்த பயணியரை மீட்டனர். சிறார்கள், பெண்கள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் நவாஸ், 6, என்ற சிறுவன் உயிரிழந்தார். ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை