உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி அறிவித்த மத்திய அரசு

கர்நாடக கிராமப்புற மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி அறிவித்த மத்திய அரசு

பெங்களூரு: 'கர்நாடகாவின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, 25 கோடி ரூபாய் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின், 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட, கர்நாடகாவுக்கு ஒதுக்கப்படவில்லை என, முதல்வர் சித்தராமையா உட்பட மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.ஆனால், பல்வேறு திட்டப் பணிகளுக்கு, 15,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூரில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இதற்கிடையில், கர்நாடக கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளுக்காக, 25.17 கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.இந்த நிதியில், 23.766 கி.மீ., துாரத்துக்கான 18 கிராமப்புற சாலைகள், 2 மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிராமங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை