வீடுகளுக்குள் புகுந்த லாரி உயிர் தப்பிய குடும்பத்தினர்
தாவணகெரே: வேகமாக சென்ற லாரி ஒன்று, இரண்டு வீடுகளுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.தாவணகெரேவின் குர்க்கி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டு ஓரத்தில் இருந்த ராமண்ணா, ஜெயண்ணா ஆகியோரின் வீடுகளில் புகுந்தது.வீட்டில் உறக்கத்தில் இருந்த குடும்பத்தினர், அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் அபாயம் ஏற்படாமல் உயிர் தப்பினர். லாரி ஓட்டுனர் லேசான காயம் அடைந்தார். தகவலறிந்த ஹதடி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.