உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக நீடிக்கும் ஆவேசம்

மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக நீடிக்கும் ஆவேசம்

ராஜேந்தர் நகர்:போட்டித்தேர்வு தயாராகும் மாணவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.டில்லி பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ராவ்வின் ஐ.ஏ.எஸ்., படிப்பு மைய கட்டடத்தின் அடித்தள வெள்ளத்தில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து பயிற்சி மாணவர்கள் நேற்று ஐந்தாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மாணவர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் கூறியதாவது:பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை 10 பேரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.நான்கு நாட்கள் ஆகியும் எங்கள் பிரச்னை அப்படியே உள்ளது. அதனால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளோம்.எங்கள் போராட்டத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆசைப்படுபவர்கள் என்பதால், நாங்கள் உடைந்து விடுவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு எங்கள் படிப்பிற்குத் திரும்புவோம். நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் போலீசார் தினமும் பேச்சு நடத்தி வருகின்றனர். எனினும் அரசு சார்பில் மாணவர்களின் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை என்பதால் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.மாணவர்களின் பிரதிநிதிகள் குழு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்ததாக மத்திய டி.சி.பி., எம்.ஹர்ஷா தெரிவித்தார்.

அனைவருக்கும் தோல்வி

“ராஜேந்தர் நகர் பயிற்சி மைய விவகாரம் என்பது, நம் அனைவருக்கும் தோல்வி. கடுமையான கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன, அவை கவனிக்கப்பட வேண்டும்,” என, எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாரிக் தாமஸ் வருத்தம் தெரிவித்தார்.ராஜேந்தர் நகரில் ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தன் கடமையை மாநகராட்சி சிறப்பாக செய்திருக்க வேண்டும்.நீங்கள் (மாணவர்கள்) கூறியது போன்ற கட்டமைப்பு சிக்கல்கள் எங்களிடம் உள்ளன. அவை முறையாக தீர்க்கப்பட வேண்டும். இது எங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் தோல்வி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். விசாரணை நடக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நகரின் வளர்ச்சி, மாஸ்டர் பிளானைத் தாண்டி மிக வேகமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

29 அடித்தளங்களுக்கு சீல்

ராஜேந்தர் நகர் விபத்தைத் தொடர்ந்து டில்லி மாநகராட்சி அதிரடியாக களமிறங்கியுள்ளது. விதிகளை மீறி செயல்பட்டதாகக்கூறி, ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு பயிற்சி நிறுவனங்களின் 29 அடித்தளங்களுக்கு சீல் வைத்தது.ஐ.ஏ.எஸ்., குருகுல் ததாஸ்து, ஐ.ஏ.எஸ்., அகாடமி, போரம் ஐ.ஏ.எஸ்., சைக் வேர்ல்ட் ஐ.ஏ.எஸ்., சஞ்சேத்னா ஐ.ஏ.எஸ்., பிரிஷா ஐ.ஏ.எஸ்., பாத் அகாடமி மற்றும் த்ரிஷ்டி ஐ.ஏ.எஸ்., சமஸ்கிருதி அகாடமி, பிரதம் இன்ஸ்டிடியூட் ஆகியவை அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை